Antony Ajay R
நான் தாக்குதலை தாங்கிக்கொள்ளும் பழக்கம் உடையவன் மட்டுமல்ல; தாக்குதலை விரும்புகிறவனும் கூட
தாக்கப்பட்டால் தான் நானே கூட மெருகு பெற முடியும்.
மோதிக்கொள்வது என்பது சாதாரணமான விஷயம். ஆனால், அதனால் ஏற்படுகிற பலன், விளைவு என்ன என்பது தான் முக்கியமான விஷயம்!
சட்டங்கள் மட்டுமே சாதி பேதத்தை ஒழித்துவிட முடியாது. மன மாற்றமே அதை அகற்றும் மாமருந்து.
பகைவனுக்கு அருளிடலாம்; ஆனால், துரோகிகளுக்கு அருள்வது ஆபத்தானது.
உலகில், இன்று துரோகிகள் அதிகம்.
பெரியார் மலைப்பாறை. அந்த மலை குடைந்து செதுக்கப்பட்ட மாமல்லபுரத்துச் சிற்பம் அண்ணா. நாமெல்லாம் அந்த சிற்பத்தின் மாதிரிகள்
சட்டத்தைப் பயன்படுத்தி சமூகத்தை ஒழுங்குபடுத்துவது என்பது சலவை செய்யப்பட்ட உடைகளுக்கு இஸ்திரிப் போடுவது போல, கொஞ்சம் கைத்தவறினாலும் சட்டைத்துணி கருகிவிடும்.
பதவிகள், பவுசுகள் வரும்.. போகும்.. ஆனால் நிலைக்காது.. தியாகம் மட்டும் என்றும் நிலைக்கும். அது, வாழ்வில் அவனுக்கு வளமாக்க ஆக்கும் உதவி
உலகில் ஓரிருவர் சரித்திரமாகிறார்கள்..
ஒருசிலர்.. சரித்திரத்தை உருவாக்குகிறார்கள்..
பலர் சரித்திரத்தில் இடம் பெறுகிறார்கள்..
மிகப்பலரோ இவை எதுவுமின்றி
தரித்திரங்களாகவே மறைந்து போகிறார்கள்.!
நம் நாட்டில் இப்போது நடந்து
காட்டுகிறவர்களை விட
நடித்து காட்டுபவர்களுக்குத்தான் பஞ்சமே இல்லை
ஒளியில் தான் நமது நிழலின் வடிவம்
நமக்கு தெரிகிறது..
சோதனையில் தான்
நமது நெஞ்சின் வலிமை
நமக்கு புரிகிறது.!
அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்கள்
ஆகி விடுகிறார்கள்..
தியாகிகள் முன்னாள் தியாகிகள்
ஆவதில்லை.!
அணு அளவு கூட இதயமில்லா
ஒருவருக்கு ஆகாயம் அளவு
மூளையிருந்து என்ன பயன்.?