Mandous Cyclone Update : மெரினாவில் எழுந்த ஆக்ரோஷ அலை - சிறப்பு பாதை சேதம்

Priyadharshini R

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல், காரணமாக புதுச்சேரி, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது

இந்த புயல் இன்று காலை 5.30 மணியளவில் காரைக்காலில் இருந்து கிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவும், சென்னையில் இருந்து சுமார் 270 கிலோமீட்டர் தெற்கு-தென்கிழக்கு மையம் கொண்டுள்ளது.

சென்னை மெரினாவில் கடல் சீற்றம் காரணமாக கரையை தாண்டி அலைகள் வந்து செல்கின்றன.

சென்னையில் காற்று சீற்றத்தால் மெரினாவில் மாற்றுத்திறனாளிக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம்

கடல் சீற்றத்தை அடுத்து மெரினா கடற்கரை முழுவதுமாக மூடப்பட்டது, பொதுமக்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சென்னை மாவட்டங்களுக்கும் இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.