Priyadharshini R
வரலாற்றில் முதன்முறையாக 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது
இதற்கான தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
செஸ் குதிரைக்குத் தம்பி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை நேற்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்
அதாவது, "பேரறிஞர் அண்ணா தனது அன்புத்தொண்டர்களை தம்பி என்று வழக்கமாக அழைப்பார். எனவே செஸ் குதிரைக்குத் தம்பி எனப் பெயரிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார் ஸ்டாலின்.
தம்பி என்பது சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாகவும், நாமெல்லாம் ஒரே குடும்பம் எனவும் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் கொடுத்தார்,
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கட்டடத்தில் வரையப்பட்டுள்ள ‘தம்பி’யின் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.