Palamedu Jallikattu: திமிறும் காளைகளின் திமிலைப் பிடிக்கும் காளையர்கள்!

Priyadharshini R

உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.

இன்று காலை 7 மணியளவில், மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளும் 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.

இந்தப் போட்டி குறைந்தபட்சம் 8 சுற்றுகளாக மாலை 4 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் 50-லிருந்து 75 மாடு பிடி வீரர்கள் பங்கேற்பர்.

ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர்கள் அடுத்த சுற்றில் விளையாட அனுமதிக்கப்படுவர்.

காயமடையும் வீரர்கள் மற்றும் காளைகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை சார்பாக சிறப்பு முதலுதவி சிகிச்சைக்கான மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முதல் பரிசு பெறும் மாட்டின் உரிமையாளருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிக காளைகளைப் பிடித்து முதலிடம் பெறும் மாடு பிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.