Priyadharshini R
உலகின் இரண்டாவது பணக்கார நாடாக கத்தார் உள்ளது. எந்த கத்தார் குடிமகனும் வறுமைக் கோட்டிற்குக் கீழே இல்லை
பல ஆண்டுகளுக்கு அதன் பொருளாதாரத்தை நிலைநிறுத்துமளவிற்கு எண்ணெய் வளங்களைக் கொண்டுள்ளது கத்தார்.
கத்தாரில் இயற்கையான காடுகள் இல்லை
கத்தாரில் எண்ணெய் கண்டுபிடிப்பதற்கு முன்பு முத்து வேட்டையே பிரதானமாக இருந்தது.
கத்தாரின் தனிநபர் CO2 பங்களிப்பு தான் உலகிலேயே அதிகமாகும்.
1820களில் நிறுவப்பட்ட தோஹா நகரம் 1971 இல் ஆங்கிலேயர்களிடமிருந்து நாடு சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து தேசிய தலைநகராக மாற்றப்பட்டது.
தோஹா மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தான் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 80% க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
ஒட்டகப் பந்தயம் அரபு நாடுகளில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாகும். ஒட்டகப் பந்தயங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவதை 2005 ல் தடை செய்தனர்.
கத்தார் உலகின் இரண்டாவது மிகவும் தட்டையான நாடாக விளங்குகிறது.
உலகத்திலேயே பிபிசிக்கு அடுத்தப்படியாக உள்ள அல் ஜசீராவின் தாய் நிறுவனம் கத்தாரில் உள்ளது.