Antony Ajay R
உலகிலேயே மிகப் பெரிய வாழைப்பழ வகை the giant highland banana.
நியூ கினியாவின் வெப்பமண்டல மலைப்பிரதேச காடுகளில் இது உருவானது. இதனை முசா இன்ஜென்ஸ் என்றும் அழைக்கின்றனர்.
இந்த மரங்களின் தண்டு தரையிலிருந்து 15 மீட்டர் (49 அடி) உயரத்துக்கு வளர்ந்திருக்கிறது. விரிந்த இலையின் நுனி 20 மீட்டர் (66 அடி) உயரத்தில் இருக்கிறது.
இதன் தண்டின் விட்டம் 3 அடி வரை இருக்குமாம். வளர்ந்த மனிதரும் கட்டிப்பிடிக்க முடியாது தான்.
இதில் விழும் ஒரு தாரில் 300 பழங்கள் வரை இருக்கும்.
தனியாக ஒரு வாழைப்பழம் 30 - 50 செ.மீ நீளத்தில் 2 கிலோ வரை எடை இருக்கும்.
இதனை சமைத்தால் மட்டுமே உண்ண முடியும். ஒரு பழத்தை சாப்பிட 4 பேர் தேவை.
இந்த மரங்கள் 30 மீட்டர் அதாவது 100 அடி உயரம் கூட வளரும் என நம்பப்படுகிறது. ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை.