அஜித் அரசியலுக்கு வருவாரா ? - சுரேஷ் சந்திரா கூறிய விளக்கம் என்ன ?

அரசியலுக்கு வருவதாக வெளியான தகவலை அஜித்குமார் சார்பில் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ளார்.
Ajith Kumar

Ajith Kumar

Twitter

Published on

கடந்த பிப்ரவரி மாதம் 24 ம் தேதி வலிமை திரைப்படம் வெளியாகி தற்போது 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி வெற்றிநடை போட்டு வருகிறது.இந்த திரைப்படம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளில் வெளியானதால், ஜெயலதாவின் உதவியாளரான பூங்குன்றன் " அவர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி படத்தை வெளியிட்டிருப்பது, அஜித் அரசியலுக்கு வருவதை உறுதி செய்கிறார் என காட்டுகிறது "என்று கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

"இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்கும் பொருட்டு அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டரில் ஒரு செய்தியை வெளியிட்டார்.அதில் கூறியிருப்பதாவது :

அஜித்திற்கு அரசியலுக்கு வரும் எண்ணம் துளியும் இல்லை. தயவு செய்து மீடியா நண்பர்களும், அஜித் ரசிகர்களும் இது போன்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com