பொன்னியின் செல்வன்: இன்று மாலை வெளியாகிறது 'ராட்சஸ மாமனே' Lyric Video

கம்சன் ஆட்டம் பகுதி தான் படத்தில், ராட்சஸ மாமனே என்ற பாடலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கவிஞர் கபிலன் எழுதியுள்ள இந்த பாடல், பாடகர்கள் ஸ்ரேயா கோஷல், பாலக்காட் ஸ்ரீராம், மஹேஷ் விநாயக் ராம் ஆகியோர் பாடியுள்ளனர்.
'ராட்சஸ மாமனே'
'ராட்சஸ மாமனே'டிவிட்டர்
Published on

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் ராட்சஸ மாமனே பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. ஏ ஆர் ரஹ்மான் பின்னணி இசை அமைத்திருக்கிறார். கடந்த வாரம் வெளியான படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கதையின் முக்கிய பாத்திரமான வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கிறார். கதையின் ஒரு கட்டத்தில் இளவரசி குந்தவையை சந்திக்க கம்சனாக மாறுவேடம் பூண்டு நாடகம் ஆடுவார்.

நாடகம் முடிந்து அரண்மனைக்குள் நுழைந்து இளவரசியை சந்திப்பார் வந்தியத்தேவன். கதையை அடுத்தக் கட்டத்திற்கு கூட்டி செல்லும் முக்கிய காட்சியாகும் இவர்களது சந்திப்பு.

இந்த கம்சன் ஆட்டம் பகுதி தான் படத்தில், ராட்சஸ மாமனே  என்ற பாடலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கவிஞர் கபிலன் எழுதியுள்ள இந்த பாடல், பாடகர்கள் ஸ்ரேயா கோஷல், பாலக்காட் ஸ்ரீராம், மஹேஷ் விநாயக் ராம் ஆகியோர் பாடியுள்ளனர்.

இதன் Lyric Video இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக மெட்ராஸ் டாக்கீஸ் தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு, தமிழில், கவிஞர்கள் இளங்கோ கிருஷ்ணன், சிவா அனந்த், கிருத்திகா நெல்சன் மற்றும் கபிலன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது

'ராட்சஸ மாமனே'
Ponniyin Selvan: “பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தை நான் கேட்டேன்” - ஆடியோ லாஞ்சில் ரஜினி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com