

அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வேளையில் ஜவான் படத்தின் ப்ரிவியூ வீடியோ ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரிலீஸ் ஆவதற்கு முன்பே வசூலில் பட்டையை கிளப்பியுள்ளது ஜவான். ஜவான் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே ரூ. 250 கோடி வரை வசூல் செய்துள்ளது.
சாட்டிலைட், ஆடியோ, டிஜிட்டல் ஆகிய உரிமைகள் மொத்தமாக ரூ. 250 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தான் ரிலீஸுக்கு முன்பே ஜவான் திரைப்படம் ரூ. 250 கோடி வசூல் செய்துவிட்டது என கூறப்படுகிறது.
மேலும் இப்படம் கண்டிப்பாக ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust