காதல், காமம், கொஞ்சம் உளவியல் : வசப்படுத்த முடியாத நேரம் - 8

ஆண்களைபோல விந்தணு போன்ற எதுவும் பெண்களுக்கு இல்லை. தொடர்ந்து ஒருமுறைக்கு மேல் உறவில் ஈடுபடுவது பெண்களுக்குப் பிரச்சனை இல்லை.
Sex

Sex

Twitter

பொதுவாகக் காம உறவில் கிடைக்கின்ற இன்பமும் சுகமும் திருப்தியும் ஆகிய எல்லாமே மனம் சார்ந்தது. மனதோடு தொடர்புடையது என்று சென்ற பகுதியில் பார்த்தோம். இது உண்மை என்றாலும் நவீன செக்ஸ் அறிவியலோ இதை வேறு மாதிரி சொல்கிறது. சில அறிகுறிகளை வைத்து திருப்தியைக் கண்டுபிடிக்கலாம் என்கிறது.

செக்ஸ் சதை மாற்றம்

செக்ஸ் சதை மாற்றம்

Facebook

என்னென்ன அறிகுறிகள்?

தோலில் இளச்சிவப்பு நிறத்தில் மாற்றம் தெரியும். இதை ‘செக்ஸ் சதை மாற்றம்’ என்பார்கள்.

நல்ல சிவப்பு நிற தோலுடைய பெண்களிடம் இதைப் பார்த்துக் கண்டுபிடிக்கலாம். மாநிறம், கருப்பு நிறத் தோலில் கண்டுபிடிப்பது சற்று கடினம். இளசிவப்பாவதை சரியாகப் பார்க்க முடியாது.

உறவின் ஆரம்பத்தில், மார்பில் தோல் இளஞ்சிவப்பாக மாற ஆரம்பிக்கும். இது அப்படியே வயிறு வரை கீழே இறங்கும். உறவின் உச்சத்தில் முகத்துக்கும் பரவினால் அந்தப் பெண் உறவின் திருப்தியை உணர்ந்ததாக அர்த்தம்.

Sex

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : இன்பங்களில் பல வகை! - 6

Unsatisfied Woman

Unsatisfied Woman

Facebook

கண்களில் பாப்பா பெரிதாகும்.

உடலில் தசைகள் இறுக்கமாக இருந்தவை, அப்படியே தளர்ந்துபோகும். உறவின்போது தசைகள் இறுக்கமானால்தான், இயல்பாக இயங்க முடியும். உச்சகட்ட இன்பத்தை உணர்ந்ததும் தசைகள், அடுத்த நொடியே தளர்ந்துவிடுகின்றன.

இதெல்லாம் அனைவருக்கும் பொருந்தும் எனச் சொல்ல முடியாது. சிலருக்குப் பொருந்தலாம். சிலருக்குப் பொருந்தாமல் போகலாம். பொதுவாக, ஆண்களுக்கு விந்து வெளியேறுவதை வைத்து அவன் உச்சக்கட்ட இன்பத்தை அடைந்துவிட்டான் என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், பெண்களுக்கு இப்படி ஒன்று இல்லை. இன்னும் கொஞ்ச நேரம் உறவில் இருந்திருக்கலாமே எனப் பெண்ணுக்குத் தோன்றினால், அப்படி நினைப்பு வந்தாலோ … அவள் உச்சக்கட்ட இன்பத்தைப் பரவசத்தை எட்டவில்லை என்றே அர்த்தமாகிறது.

Premature Ejaculation

Premature Ejaculation

Twitter

அதென்ன ‘வசப்படுத்த முடியாத நேரம்’

ஒரு ஆண் விந்து வெளியேறிய பிறகு, காம உறவில் ஈடுபடுவதை நிறுத்திவிடுவான். அதன் பிறகு, தன் துணை எவ்வளவு சீண்டினாலும் தூண்டி விட்டாலும் உடனே திரும்பவும் உறவுக்குள் ஈடுபட அவனது உடல் ஒப்புக்கொள்ளாது; தயாராகாது. ஆனால், பெண்களுக்கு அப்படி இல்லை. ஏனெனில், ஆண்களைபோல விந்தணு போன்ற எதுவும் பெண்களுக்கு இல்லை. தொடர்ந்து ஒருமுறைக்கு மேல் உறவில் ஈடுபடுவது பெண்களுக்குப் பிரச்சனை இல்லை.

ஆண்களுக்கு விந்து வெளியேறிய பிறகு, திரும்பவும் உடனே விறைப்புத்தன்மை வராது என செக்ஸ் அறிஞர்கள் சொல்கின்றனர். 1955-ம் ஆண்டு இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து இருக்கிறார்கள். எங்கோ, யாருக்காவது, ஒருவேளை அரைகுறையாக விறைப்புத்தன்மை உடனே வந்தாலும், இரண்டாவது முறை விந்து உடனே வெளியேறாது. இப்படி ஒருமுறை விறைப்புத்தன்மை வந்ததற்கும் அடுத்த முறை விறைப்புத்தன்மை ஏற்படுவதற்கும் இடைப்பட்ட நேரத்தை ‘வசப்படுத்த முடியாத நேரம்’ எனச் சொல்கிறார்கள்.

பெண்களுக்கு எந்த நேரம்

பெண்களுக்கு எந்த நேரம்

Twitter

பெண்களுக்கு எந்த நேரம்?

இந்த வசப்படுத்த முடியாத நேரம். அனைவருக்கும் பொருந்துமா? ஆம்… அனைவருக்குமே பொருந்தும்… அதாவது, ஆண்களுக்கு மட்டும். பெண்களுக்கு அப்படியில்லை. இந்த மாதிரி எந்த நேரமும் பெண்களுக்குக் கிடையாது. காம உறவில் ஒரு ஆண் ஒரு முறை மட்டுமே புணர்ச்சிப் பரவசநிலையை அடைய முடியும். ஆனால், பெண்களுக்குப் பலமுறை பரவசத்தை அடைய முடியும்; அடைவதும் சாத்தியம்.

உடலுறுவுக்கான காலமாக, ஒரு தம்பதியர், ஒருமுறை இணைய 5 நிமிடங்களோ ஒரு மணி நேரமோ என எவ்வளவு நேரத்தை எடுத்துக்கொண்டாலும் அந்தக் குறிப்பிட்ட பிணைப்பில் ஆண் ஒருமுறை மட்டுமே பரவச உச்சக்கட்ட இன்ப நிலையை அடைந்திருப்பர். ஒருமுறைக்கு மேல் ஆண்களுக்குப் பரவச நிலை எட்டாது. சிலர் பல முறைகள் அடைந்திருப்பதாக வெளியே பெருமைக்காகப் பொய் சொல்வதும் உண்டு. ஆனால், அது உண்மையில்லை என்கிறது செக்ஸ் அறிவியல்.

மீண்டும் மீண்டும் ஒரு ஆண் பரவச நிலையை எட்ட வேண்டுமெனில் கொஞ்சமாவது இடைவெளிவிட்டு மீண்டும் இணைய முயற்சி செய்யலாம். ஆனால், ஒரு முறை இணையும் இணைப்பிலே பல முறை உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிக்க ஆண்களால் முடியாது. ஒருமுறை மட்டுமே இன்பத்தை அனுபவிக்க முடியும். நவீன செக்ஸ் அறிவியல் இதை 70 ஆண்டுக் கால முன்னரே சொல்லிய உண்மை இது. ஆனால், காமச்சூத்திரம் இந்த உண்மையை அந்தக் காலத்திலேயே சொல்லிவிட்டது. அதனால்தான் இன்றளவும் நவீன செக்ஸ் அறிவியலோடு ஒப்பிட்டால் ‘காமச்சூத்திரம்’ தனித்துவ இடத்தில் இருக்கிறது. அதன் உண்மைகளும் தணித்து நிற்கின்றன.

இதில் முக்கியமான இன்னொரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். பெண்களால் புணர்ச்சி பரவசநிலையைப் பலமுறை அடைவது சாத்தியம் என்றாலும், எல்லாப் பெண்களும் ஒரே மாதிரி கிடையாது. சிலருக்கு முடியலாம். சிலருக்கு முடியாமல் போகலாம். அவரவரின் உடல் நிலை, மனநிலை, சூழல் சார்ந்தே இது நிகழும். மேலும், இந்தக் கணிப்பெல்லாம் அந்தக்காலத்தை வைத்தும் சொல்லப்படுவதால், இக்காலத்திலும் பெண்களின் நிலை இப்படியே இருக்கலாம் எனச் சொல்ல முடியாது. சிலரால் முடியும்; சிலரால் முடியாது எனலாம்.

பொதுவாக, உடல் உறவில் ஆண்களுக்கு விந்து வெளியேறிவிட்ட பிறகு உறவில் ஈடுபட்டிருப்பதை, தன் உடலை இயக்குவதை நிறுத்திவிடுவார்கள். இது இயல்புதான். ஆனால், உடல் உறவில் ஈடுபட்ட நேரம் குறுகிய நேரமாக இருந்தால், பெண்களுக்குக் கஷ்டம்தான். இதுபோன்ற ஆண்கள் மீது பெண்களுக்கு அதிக ஈடுபாடு இருக்குமா என்பதில் சந்தேகமே. அப்போ, பெண்களுக்கு அதிக ஈடுபாடு எந்த ஆண்களின் மீது வரும்?

முந்தையப் பகுதியைப் படிக்க

Sex

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : செயற்கை இன்பமும் இயற்கை இன்பமும் 7

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com