இந்திய ரயில்வே: நிலவை விட நீளமான பாதை! இத்தனை விஷயங்கள் இருக்கிறதா?

இந்த ரயில் பயணங்களை நெகிழ்ச்சியானதாக மாற்றும் இந்திய ரயில்வே குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை இப்பதிவில் காணலாம்.
இந்திய ரயில்வே: நிலவை விட நீளமான பாதை! இத்தனை விஷயங்கள் இருக்கிறதா?
இந்திய ரயில்வே: நிலவை விட நீளமான பாதை! இத்தனை விஷயங்கள் இருக்கிறதா?Twitter
Published on

நாம் எல்லாரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது ரயிலில் பயணம் செய்திருப்போம். அந்த பயணங்கள் ஒரு சில நேரங்களில் சுவாரஸ்யமானதாகவும், ஒரு சில நேரங்களில் சலிப்பாகவும் இருந்திருக்கலாம்.

சில சமயங்களில் இந்த ரயில் பயணங்கள் மறக்க முடியாத நினைவுகளைக் கூட தந்து போயிருக்கும். எது எப்படியோ, இந்த ரயில் பயணங்களை நெகிழ்ச்சியானதாக மாற்றும் இந்திய ரயில்வே குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை இப்பதிவில் காணலாம்.

  • இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் அனைத்து வழித்தடங்களின் மொத்த தூரம் இங்கிருந்து நிலவுக்குச் செல்லும் தூரத்தை விட மூன்றரை மடங்கு அதிகமாம்.

  • இந்திய ரயில்வேயின் மிகவும் நீளமான பிளாட்பார்ம் கோரக்பூரில் அமைந்துள்ளது. இதன் ஒட்டுமொத்த நீளம் 4,483 அடியாகும்.

  • இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் 1853, ஏப்ரல் 16 ஆம் தேதியன்று மும்பை மற்றும் தானே பகுதிக்கு இடையே இயக்கப்பட்டது.

  • ஹவுரா முதல் அமிர்சர் வரை இயக்கப்படும் அதிவேக விரைவு வண்டி கிட்டத்தட்ட 115 நிறுத்தங்களை கொண்டிருக்கிறது.

  • இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் மிகக் குறுகிய ரயில் நிலையம் ஒரிசாவில் இருக்கிறது. அதே போல, மிக நீளமான ரயில் நிறுத்தம் தமிழகத்தில் உள்ள ஸ்ரீவெங்கடநரஸிம்மராஜுவரிபேட்டை ரயில் நிலையம் ஆகும்.

இந்திய ரயில்வே: நிலவை விட நீளமான பாதை! இத்தனை விஷயங்கள் இருக்கிறதா?
Indian Railways: சென்னை சென்ட்ரல் முதல் பரோக் வரை இந்தியாவின் பழமையான ரயில் நிலையங்கள்
  • தமிழகத்தில் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் நீலகிரி பயணிகள் ரயில் வெறும் 10 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.

  • அதே நேரத்தில், இந்தியாவின் வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கிலோ மேட்டர் வேகத்திற்கு செல்லக்கூடிய அதிவிரைவு வண்டியாகும்.

  • இந்திய ரயில்வே துவங்கப்பட்டு சுமார் 50 ஆண்டுகளுக்கு கழிப்பறை வசதி இல்லாமல் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாம்.

  • உலகில் அதிகளவு ஊழியர்களுடன் இயங்கும் 8 ஆவது நிறுவனம் இந்திய ரயில்வே ஆகும்.

  • ஒவ்வொரு பயணிகள் ரயிலுக்கும் 4 அவசர கால வழி இருக்கிறது.

    இத்தனை விஷயங்களைத் தெரியாமல் நாம் இன்னும் ரயிலில் பயணம் செய்துகொண்டிருக்கிறோம் என்பது கொஞ்சம் சங்கடமாகத் தான் இருக்கிறது

இந்திய ரயில்வே: நிலவை விட நீளமான பாதை! இத்தனை விஷயங்கள் இருக்கிறதா?
Indian Railways : ஏசி பெட்டிகள் ரயிலின் நடுபகுதியில் இருப்பது ஏன் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com