Aero India : போர் விமானத்தில் ஹனுமன் படம் - மீண்டும் கிளம்பிய சர்ச்சை?

ஏரோ இந்தியா நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட போர் விமானத்தின் வால் பகுதியில் அனுமன் படம் ஒட்டப்பட்டிருந்தது சர்ச்சை கிளம்பியது, அந்த படம் நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஹனுமன் படம் ஒட்டப்பட்டுள்ளது.
Aero India: Lord Hanuman pic back on tail of HAL aircraft 3 days after removal
Aero India: Lord Hanuman pic back on tail of HAL aircraft 3 days after removalTwitter
Published on

பெங்களூரில் ஆண்டுதோறும் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள், ஹெலிகாப்டர்களை திறம்பட இயக்கி பைலட்டுகள் சாகச நிகழ்ச்சியில் ஈடுபடுவார்கள்.

அதன்படி பெங்களூர் எலகங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார்.

ஏரோ இந்தியா கண்காட்சியில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட்டேடின், எச்.எல்.எஃப்.டி-42 ரக போர் விமானம் காட்சிக்கு வைக்கப்பட்டது.

கண்காட்சி நிகழ்ச்சியின் முதல் நாளில், அந்த விமானத்தின் வால் பகுதியில் ஹனுமன் படம் ஒட்டப்பட்டிருந்த‌து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பின.

அதாவது சூப்பர் சோனிக் டிரெய்னர் என அழைக்கப்படும் எச்எல்எப்டி 42 ரக போர் விமானத்தில் அனுமன் ஸ்டிக்கர் இடம்பெற்றதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Aero India: Lord Hanuman pic back on tail of HAL aircraft 3 days after removal
Airbus : சீனா, அமெரிக்காவிலிருந்து வரும் பாகங்கள் - விமானம் தயாரிக்கப்படுவது எப்படி?

இதையடுத்து, அடுத்த நாள் அனுமன் படம் நீக்கப்பட்டது, மேலும் போர் விமானத்தின் வலிமையை காட்டுவதற்காக அனுமன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கண்காட்சியின் கடைசி நாளான இன்று, மீண்டும் ஹனுமன் படம் ஒட்டப்பட்டுள்ளது.

இது குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Aero India: Lord Hanuman pic back on tail of HAL aircraft 3 days after removal
2023ல் இருந்து 2022க்கு டைம் டிராவல் செய்த விமானம்: ஆச்சரியத்தில் இணையம் - எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com