

மணமக்களே இல்லாமல் பெங்களூருவில் ஒரு ராயல் ஹைதராபாத்தி திருமணம் நடைபெறவுள்ளது. வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த வெட்டிங்கில், ஒரு மெகா உணவு விருந்து இருக்கும்.
சொல்லப்போனால் இந்த விருந்து தான் வெட்டிங்கே!
குழப்பமாக இருக்கிறதா? ஹைதராபாத்தின் பிரபலமான உணவகம் ஒன்று, தங்கள் பகுதியின் உணவின் சுவையை பெங்களூரு மக்கள் சுவைக்க வேண்டும் என நினைத்து இந்த ’திருமண’ ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்த நிகழ்வின் பெயர் ‘தாவ்த்-ஈ-ஹைதராபாத்’. மதாம் அல் டுர் என்கிற உணவகம் தான் இந்த மெகா உணவு விருந்தை ஏற்பாடு செய்துள்ளது.
பெங்களூருவில் முதன்முறையாக ‘தாவ்த்-ஈ-ஹைதராபாத்’ விருந்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது ஹைதராபாத்தின் ராயல் வெட்டிங். இதில் மணமக்கள் இல்லை. ஹைதராபாத்தி சமையலின் சிறப்பை அனுபவிக்கவும், தடையற்ற கொண்டாட்டத்துக்காகவும் இந்த இரவில் எங்களுடன் இணையுங்கள்” என்று விளம்பரப்படுத்தியிருந்தது.
மேலும் அவர்கள் கூறுகையில், மணமக்கள் மட்டுமே இருக்கமாட்டார்கள். மற்றபடி ஒரு திருமணத்தில் நடக்கும் அனைத்து கொண்டாட்டங்களும் இங்கு இருக்கும் எனவும் தெரிவித்திருந்தனர்.
ஹைதராபாத்தி உணவுகளை சுவைத்துக்கொண்டே, கவாலி (மங்கள இசை) மற்றும் சூஃபி இசை, மெஹந்தி ஃபன்க்ஷன், கவிதை வாசிப்பது, ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த திருமண விருந்தில் மொத்தம் 30 வகையான உணவுகள் பரிமாறப்படவுள்ளது. தவிர சில நட்சத்திரங்களும் இந்த திருமணத்தில் கலந்துகொள்ளவுள்ளனராம்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust