இந்தியாவின் நம்பர் 2 பணக்காரர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், மும்பை நகரத்தில் உள்ள ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனைக்கு அழைப்பு வந்திருப்பதாகவும், அது தொடர்பாக காவல் துறை துரிதமாக நடவடிக்கை எடுத்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சுமார் 94 பில்லியன் அமெரிக்க டாலரோடு, கெளதம் அதானிக்குப் பிறகு, இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராகத் திகழும் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்கிற இந்தியாவின் மிகப் பெரிய, இந்தியப் பங்குச் சந்தை மதிப்பில் முதலிடம் வகிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடெயில், ரிலையன்ஸ் டிஜிட்டல், ரிலையன்ஸ் பெட்ரோலியம், ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்... என பல லாபகரமான துணை நிறுவனங்களும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்கிற நிறுவனத்தின் பெயரிலேயே முகேஷ் அம்பானி நடத்தி வருவதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானிக்கும், அவரது குடும்பத்தினரின் (மனைவி நீதா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி, மகன் ஆனந்த் அம்பானி...) உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் இன்று (ஆகஸ்ட் 15, திங்கட்கிழமை) மும்பை நகரத்தில் உள்ள ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனை தொலைபேசிக்கு அச்சுறுத்தல் வந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக டி பி மார்க் காவல் நிலையத்தில் மருத்துவமனை நிர்வாகம் புகார் அளித்திருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளன. இப்படி இன்று ஒரே நாளில் மொத்தம் எட்டு அச்சுறுத்தல் அழைப்புகள் வந்ததாகக் கூறப்படுகிறது.
காவல் துறை தரப்பில் இருந்து, ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையிலிருந்து புகார் வந்ததாகவும், யார் இந்த அழைப்பைச் செய்தது என தொலைப்பேசி எண்களைச் சரிபார்த்து விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர்.
மருத்துவமனைக்கு அழைத்துப் பேசியது யாரென தங்களுக்குத் தெரியவில்லை என்றும், ஆனால் அவர்கள் முகேஷ் அம்பானியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தொனியில் அச்சுறுத்தியதாகவும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையின் முதன்மைச் செயல் அதிகாரி மருத்துவர் தரங் கியான்சந்தானி கூறினார்.
கடந்த 2021ஆம் ஆண்டு மும்பை நகரத்தில் உள்ள, முகேஷ் அம்பானியின் அண்டிலா வீட்டுக்கு அருகில் 20 ஜெலட்டின் வெடி மருந்துகளோடு ஒரு கார் நிறுத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பத்திரிகைகளில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.
இந்தியா தன் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நன்னாளில், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஒருவருக்கே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு இருப்பது, பொது மக்கள் மத்தியில் சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashne