இந்தியாவில் மக்கள் வாழ தகுதியான நகரங்களில் மும்பைக்கு முதலிடம்! சென்னையின் இடம் என்ன?

இந்த கணக்கெடுப்பு ஒரு நகரத்தின் நிலைத்தன்மை, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவைகளை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது.
 Mumbai India’s ‘most liveable city’ & Bengaluru not far behind, shows Economist data
Mumbai India’s ‘most liveable city’ & Bengaluru not far behind, shows Economist dataTwitter
Published on

இந்தியாவில் மக்கள் வாழ்வதற்கான சிறந்த நகரங்களாக தலைநகர் டெல்லி மற்றும் மும்பை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2023 ஆம் ஆண்டிற்கான எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்டின் (EIU) க்ளோபல் லிவ்வபிளிட்டி தரவுகளின் படி, டெல்லி மற்றும் மும்பை நகரங்கள் 'மக்கள் வாழக்கூடிய' சிறந்த நகரங்களாக பெயர் பெற்றுள்ளது.

உலகளவில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இந்த நகரங்கள் குறியீட்டில் 100க்கு 60.2 என்ற மதிப்பெண்களுடன் 141 ஆவது இடத்தைப் பெற்றுள்ளன.

இந்த கணக்கெடுப்பு ஒரு நகரத்தின் நிலைத்தன்மை, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவைகளை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது.

இந்த பட்டியலில் 98.4 மதிப்பெண்களை எடுத்து ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா மக்கள் வாழக்கூடிய சிறந்த நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது சிறந்த நகரங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள 173 நகரங்களில் டெல்லி மற்றும் மும்பையைத் தவிர சென்னை, அகமதாபாத் மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

அதாவது, மக்கள் வாழ்வதற்கான சிறந்த நகரங்களில் சென்னை 59.9 மதிப்பெண் பெற்று 144வது இடத்தையும், அகமதாபாத் 58.9 மதிப்பெண்களுடன் 147வது இடத்தையும், பெங்களூரு 58.7 மதிப்பெண் பெற்று 148வது இடத்தையும் பிடித்தது.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் மும்பை நகரம் 100க்கு 56.2 எடுத்திருந்தது. அதே போல டெல்லி நகரம் 56.2 மதிப்பெண்களைப் பெற்று 140வது இடத்தில் இருந்தது. பெங்களூரு நகரம் கடந்த ஆண்டு 54.4 மதிப்பெண்கள் பெற்றிருந்தது.

 Mumbai India’s ‘most liveable city’ & Bengaluru not far behind, shows Economist data
இந்தியாவிலேயே டாப் 10 நெருக்கடியான நகரங்கள் - சென்னையின் இடம் என்ன தெரியுமா?

இந்த கணக்கீடுகள் படி, மக்கள் வாழ்வதற்கு மிகக் குறைந்த தகுதிபெற்ற நகரங்களின் பட்டியலில் டவுலா (கேமரூன்), கிய்வ் (உக்ரைன்), ஹராரே (ஜிம்பாப்வே), டாக்கா (வங்காளதேசம்), போர்ட் மோர்ஸ்பி (பப்புவா நியூ கினியா), கராச்சி (பாகிஸ்தான்), லாகோஸ் (நைஜீரியா), அல்ஜியர்ஸ் (அல்ஜீரியா), திரிபோலி (லிபியா) மற்றும் டமாஸ்கஸ் (சிரியா) ஆகிய நகரங்கள் உள்ளன.

மற்ற நாடுகளில் உள்ள சிறந்த நகரங்களை எடுத்துப் பார்கையில், ஆஸ்திரியாவின் வியன்னா (98.4), டென்மார்க்கின் கோபன்ஹேகன் (98.0), சுவிட்சர்லாந்தின் சூரிச் (97.1) மற்றும் ஜெனீவா (96.8) போன்ற ஐரோப்பிய நாடுகள் முதல் 4 இடங்களைப் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 10 இடத்தில் எந்தவொரு அமெரிக்க நகரங்களும் இடம் பெறவில்லை.

ஆனால் 19 சீன நகரங்கள் 10 முதல் 100க்கும் இடைப்பட்ட இடங்களில் உள்ளன.

சீனாவில் மக்கள் வாழக்கூடிய சிறந்த நகரமாக அறிவிக்கப்பட்டுள்ள நான்டாங் (78.7) பட்டியலில் 82 வது இடத்தைப் பிடித்துள்ளது.

அதே நேரத்தில் தலைநகர் பெய்ஜிங் 78.1 மதிப்பெண்களைப் பெற்று 85வது இடத்திற்கு வந்துள்ளது.

நகரங்களின் மதிப்பீடுகள்:

நிலைத்தன்மை - பயங்கரவாத அச்சுறுத்தல், இராணுவ அச்சுறுத்தல், உள்நாட்டு கலவரம், வன்முறை, சிறு குற்றங்கள் ஆகியவை இல்லாத அல்லது குறைவான நாடுகள்.

சுகாதாரம் - மக்களின் உடல்நலப் பாதுகாப்பு, தனியார் சுகாதாரப் பாதுகாப்பின் தரம், பொது சுகாதாரப் பாதுகாப்பு, மருந்துகள் ஆகியவை சுகாதாரம் என்ற பிரிவின் கீழ் கவனிக்கப்படுகிறது.

கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் - ஈரப்பதம்/வெப்பநிலை மதிப்பீடு, பயணிகளுக்கு காலநிலையின் அசௌகரியம், ஊழல் நிலை, சமூக அல்லது மத கட்டுப்பாடுகள், விளையாட்டு மற்றும் கலாச்சாரம், உணவு மற்றும் பானம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகள்.

 Mumbai India’s ‘most liveable city’ & Bengaluru not far behind, shows Economist data
உலகின் மிக பழமையான நாடுகளின் பட்டியலில் ஈரான் முதலிடம் : இந்தியாவின் இடம் என்ன?

கல்வி - தனியார் கல்வியின் தன்மை மற்றும் பொது கல்வியின் தன்மை.

உள்கட்டமைப்பு - சாலை, பொது போக்குவரத்து, சர்வதேச இணைப்புகள், நல்ல தரமான வீடுகள், எரிசக்தி வழங்கல், நீர் வழங்கல் மற்றும் தொலைத்தொடர்பு.

இந்த காரணிகளின் அடிப்படையில் 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை எடுக்கும் நகரத்தில் சில சவால்கள் இருக்கலாம்.

அதே நேரத்தில், 70 முதல் 80 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்கும் நகரங்களில் சவால்கள் இருந்தாலும், அவை மக்களின் அன்றாட செயல்பாட்டை பாதிக்க வாய்ப்பில்லை என்பதைக் காட்டுகிறது.

இதற்குக் கீழே மதிப்பெண்களைக் கொண்ட நகரங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

 Mumbai India’s ‘most liveable city’ & Bengaluru not far behind, shows Economist data
உலகின் துயரமான நாடுகள் : ஜிம்பாபேவுக்கு முதலிடம் - இந்தியாவின் இடம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com