ஆனந்த் மகிந்திராவின் பொங்கல் கலாய் ட்விட் - “போடா டேய்”

“நான் இப்போது வரை அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன். சில சமயம் சத்தமாக, சில சமயம் என் மூச்சுக்குள் சொல்கிறேன் “ எனச் சிரிப்பு எமோஜியுடன் பதிவிட்டிருந்தார்.
ஆனந்த் மகிந்திரா

ஆனந்த் மகிந்திரா

Twitter

Published on

மகிந்திரா கார் தயாரிப்பு நிறுவனத்தின் கௌரவ தலைவராக இருந்து வருகிறார் ஆனந்த் மகிந்திரா. நேற்று தனது ட்விட்டர் கணக்கில் “போடா டேய்” என்ற தமிழ் வார்த்தையைக் குறிப்பிட்டு அவர் போட்டுள்ள ட்விட் செம வைரலானது.


அதில் அவர், “தமிழ் ஆற்றல் திறன் கொண்ட மொழி” எனத் தலைப்பிட்டு ஒரு புகைப்படத்தை (மீம்) பதிவிட்டுள்ளார். அதில், ஆங்கிலத்தில் “I'm afraid I don't have the time or inclination to listen to your explanation& understand your point of view. Would really appreciate if you'd please leave me alone” என்ற பெரிய சொற்றொடரை தமிழில் எளிதாக “போடா டேய்” என சொல்லிவிடலாம். இரண்டுமே ஒரே பொருள் தரக்கூடியவைதான். என நகைச்சுவையாக கூறியிருந்தார்.

<div class="paragraphs"><p>ஆனந்த் மகிந்திரா</p></div>
"கபே காபி டே" - யார் இந்த மாளவிகா? ஒரே ஆண்டில் 4000 கோடி கடனை அடைத்து சாதித்த பெண்!
<div class="paragraphs"><p>ஆனந்த் மகிந்திரா</p></div>

ஆனந்த் மகிந்திரா

Twitter


தமிழ் - நாஸ்டாலஜி

பதிவில், “நான் படிக்கும் காலத்தில் தமிழகத்திலிருந்தபோது முதலில் கற்றுக்கொண்ட தமிழ் வார்த்தை ‘போடா டேய்’ தான்” எனக் கூறியுள்ளார். இப்போதும் தமிழகம் வந்திறங்கும் ஒருவர் மிக எளிதாக கேப் டிரைவரிடம் இருந்தோ, பஸ் கண்டக்டரிடம் இருந்தோ கற்றுக்கொள்ளும் ஒரு சொல்லாகப் போடா டேய் இருப்பதை மறுக்க முடியாது தானே?

மேலும் அவரது பதிவில், “நான் இப்போது வரை அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன். சில சமயம் சத்தமாக, சில சமயம் என் மூச்சுக்குள் சொல்கிறேன் “ எனச் சிரிப்பு எமோஜியுடன் பதிவிட்டிருந்தார்.


ஆனந்த் மகிந்திராவுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் “போடா டேய்” ஒரு ஸ்பெஷலான வார்த்தை தான். ஒரே வார்த்தையில் நெகட்டிவிடி - யை விலக்க விரும்புபவர்கள் பயன்படுத்திப் பயனடையலாம்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com