

பேடிஎம்மில் வெறும் ரூ.100 டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ததன் மூலம் ரூ.4 கோடி மதிப்பிலான கொள்ளை வழக்கு தீர்க்கப்பட்டுள்ளது.
டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் நான்கு பேர் இரண்டு கொரியர் நிறுவன நிர்வாகிகளிடம் கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது.
கொள்ளையர்கள் கண்ணில் மிளகாய் பொடியை வீசி 4 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
பஹர்கஞ்சில் அதிகாலை 4-5 மணிக்குள் இந்த சம்பவம் நடந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தளம் தெரிவிக்கப்பட்டிருகிறது. இதனையடுத்து உள்ளூர் மக்களால் போலீசாருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஜெய்ப்பூரில் இருந்து குற்றத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
காவல்துறையின் கூற்றுப்படி,
புகார்தாரர் ஒரு தனியார் கொரியர் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
அதிகாலை 4.30 மணியளவில், புகார்தாரரும் அவரது நண்பரும் சண்டிகர் மற்றும் லூதியானாவுக்கான சரக்குகளை தங்கள் அலுவலகத்திலிருந்து வெளியே கொண்டு வந்தனர். அவற்றில் நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களும் அடங்கும்
தங்கள் வாகனத்தை நோக்கி நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது நான்கு பேர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.
விசாரணையில், கொரியர் நிறுவனம் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், அதில் ஒரு வீடியோவில், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் ஒருவர் காலையில் தேநீர் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தது தெரியவந்தது.
சில நிமிடங்களுக்குப் பிறகு, கால்டாக்சி ஓட்டுநரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் மொபைல் போனை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் முதலில் தேநீர் கடையின் உரிமையாளரிடம் விசாரித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு தேநீர் வாங்கினார் எனவும் ஆனால் அவரிடம் பணம் இல்லை என்று கூறி, கால்டாக்சி ஓட்டுநரிடம் டிஜிட்டல் முறையில் பணத்தை மாற்றினார் எனவும் கடை உரிமையாளர் கூறினார். அதனை வைத்து தேநீருக்கு பணம் கொடுத்துள்ளார்.
போலீசார் அந்த கால்டாக்சி ஓட்டுநரின் அனைத்து விவரங்களையும் சேகரித்தனர். அதில் Paytm பரிவர்த்தனை மூலம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவரிடமிருந்து 100 ரூபாய் பெற்றதை கண்டுபிடித்தனர்.
Paytm தலைமையகத்தை அணுகி, அனைத்து விவரங்களையும் சேகரித்தபோது, போலீசார் நஜஃப்கரில் வசிக்கும் ஒருவரின் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்தனர்.
தொலைப்பேசி எண்ணை வைத்து கண்காணிக்கத் தொடங்கிய போலீசார், ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நால்வரும் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்தனர். அங்கு வைத்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust