

உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சாலையோர வியாபாரியின் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
துணி விற்று தினமும் 500 ரூபாய் சம்பாதிக்கும் அவர் வரி மோசடி செய்து 366 கோடி திருடியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இஜாஸ் அகமது என்ற அந்த வியாபாரி இந்த குற்றச்சாட்டிலிருந்து தன்னை மீட்குமாறு ஜிஎஸ்டி உயரதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் அகமது ஒரு பழைய பொருட்கள் குடோனைத் தொடங்கிய போது ஜிஎஸ்டி பதிவு செய்துள்ளார். ஆரம்பத்தில் தினசரி 500 முதல் 1000 ரூபாய் சம்பாதித்து வந்த அவருக்கு நாளடைவில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த தொழிலை விட்டுவிட்டு துணி விற்கத் தொடங்கிவிட்டார்.
அப்போதே அந்த ஜிஎஸ்டி கணக்கை மூடிவிடுமாறு தனது கணக்காளரிடம் கூறியதாகவும் அகமது தெரிவித்திருக்கிறார். இப்போது என்ன தவறு நடந்தது என தெரியவில்லை என விழிக்கும் அவர், "உண்மையாக மோசடி செய்தவரை கண்டறியவேண்டும்" என ஜிஎஸ்டி துறையை வேண்டிக்கேட்டுக்கொண்டுள்ளார்.
மோசடி குறித்து தீவிரமாக விசாரணை செய்துவருவதாக ஜிஎஸ்டி சிறப்பு விசாரணை அதிகாரி ஜேஎஸ் சுக்லா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
"ஒரு நிறுவனத்தின் ஜிஎஸ்டி கணக்கு எண்ணை மற்றவர்கள் பயன்படுத்துவதாக புகார்கள் வந்திருக்கின்றன. இஜாஸ் அகமது மற்றும் அவரது கணக்காளரிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணைகள் முடிந்த பின்னரே கூடுதல் தகவல்கள் கிடைக்கும்" என அவர் கூறியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust