41 நாட்களில் 32 லட்சம் திருமணங்கள் : CAIT கூறிய தகவல் - ஏன் தெரியுமா?

வருடத்தில் சில நாட்கள் மட்டும் அதிகமாக கல்யாணம் காட்சிகள் நடப்பதைப் பார்த்திருப்போம். அப்படியான நாட்கள் தான் தொடங்கியிருக்கிறது. நவம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதி வரை 41 நாட்களில் 32 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ளதாக சிஏஐடி கூறியுள்ளது.
41 நாட்களில் 32 லட்சம் திருமணங்கள் : CAIT கூறிய தகவல் - ஏன் தெரியுமா?
41 நாட்களில் 32 லட்சம் திருமணங்கள் : CAIT கூறிய தகவல் - ஏன் தெரியுமா?Twitter
Published on

திருமணம் என்றாலே நம் இல்லங்களும் உள்ளங்களும் கோலாகலத்தில் நிறைந்துவிடும். உறவினர்களைப் பார்ப்பது முதல் வயிறுமுட்ட சாப்பிடுவது வரை கொண்டாட்டங்களிலேயே சில நாட்கள் நகரும். ஒரு வீட்டில் கல்யாணம் என்றால் அந்த தெருவே கல்யாண வீட்டுக் களையில் இருக்கும். ஆனால் வரப்போகும் நாட்களில் மொத்த இந்தியாவும் கல்யாணக்களையில் தான் இருக்கப் போகிறது என்று அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் (சிஏஐடி) தகவலின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

வருடத்தில் சில நாட்கள் மட்டும் அதிகமாக கல்யாணம் காட்சிகள் நடப்பதைப் பார்த்திருப்போம். அப்படியான நாட்கள் தான் தொடங்கியிருக்கிறது. நவம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதி வரை 41 நாட்களில் 32 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ளதாக சிஏஐடி கூறியுள்ளது.

CAIT
CAIT

இது வழக்கத்தை விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தது தான் பலரும் இந்த ஆண்டு அதிக திருமணங்கள் நடைபெற காரணம் என திருமண வேலைகள் துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

41 நாட்களில் 32 லட்சம் திருமணங்கள் : CAIT கூறிய தகவல் - ஏன் தெரியுமா?
எலான் மஸ்குக்கு 10 குழந்தைகள்: எத்தனை மனைவிகள்? - மஸ்க் குடும்பம் பற்றிய சுவாரசிய தகவல்கள்

இந்த அளவு அதிக திருமணங்களால் 3.75 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் என்றும் சிஏஐடி அறிக்கைகள் கூறுகின்றன. அடுத்த திருமண சீசன் ஜனவரி 14ம் தேதி தொடங்கும் என்றும் கூறியுள்ளனர். ஜூன் வரை திருமணங்கள் தொடர்ச்சியாக நடை பெற்றுகொண்டிருக்கும்.

திருமணத்துக்கு வாழைப்பந்தல் நடுதல் முதல் டெகரேஷன், சாப்பாடு, ஈவன்ட் மேனேஜ்மன்ட் என பல வேலைகளும் வரும் நாட்களில் பிசியாக நடைபெறும்.

41 நாட்களில் 32 லட்சம் திருமணங்கள் : CAIT கூறிய தகவல் - ஏன் தெரியுமா?
"PlayBoy King" 87 திருமணங்கள் செய்த 61 வயது முதியவர்- அடுத்த திருமணம் யாருடன் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com