

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடியானது, 1964-ம் ஆண்டு வரை தொழில் செய்யும் நகரமாக இருந்தது.
1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23ல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது.
தனுஷ்கோடியையும், பாம்பனையும் இணைத்த பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர்.
அங்கு புயலால் சிதைந்த மிச்சங்களாக தற்போது பழைய தேவாலயம், ரயில் நிலையம், தபால் நிலையம் போன்றவை எஞ்சியுள்ளன. சிலர் இந்த இடத்தை திகிலூட்டும் இடமாக கருதி விஜயம் செய்கின்றனர்.
மணலில் புதைந்து கிடக்கும் கட்டிடங்களையும், கடலின் அழகையும் கண்டு ரசிக்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடிக்கு வருகை தருகின்றனர். அப்படி வரும் சுற்றுலா பயணிகளுக்கு மேலும் ஒரு சிறப்பான இடம் காத்துக்கொண்டிருக்கிறது.
தனுஷ்கோடியில், ரூ.7.09 கோடி செலவில் கலங்கரை விளக்கம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த கலங்கரை விளக்கம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்தபடி மன்னார் வளைகுடா கடல் பகுதியையும், பாக் ஜலசந்தி கடல் பரப்பையும் ரசிப்பது கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. இங்கிருந்து சில மைல் தொலைவில் உள்ள இலங்கையை கூட காண முடியும். சிறிதாக கச்சத்தீவு தென்படுகிறது.
அப்படி நீங்கள் கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி நிற்கிறீர்கள் என்றால் இங்கு செலவிடும் நேரதை உங்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாது.
இரண்டு பக்கம் கடலும், நடுவில் சாலையில் வாகனங்கள் செல்வது, கடலில் படகுகள் செல்வது என கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
இந்த கலங்கரை விளக்கமானது திங்கட்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களில் திறந்திருக்கும். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2:30 மணியில் இருந்து 5 மணி வரையிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி உள்ளது.
இங்கு செல்ல நுழைவு கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.5-ம் பெரியவர்களுக்கு ரூ.10-ம் வெளிநாட்டவருக்கு ரூ.25-ம் புகைப்படம் எடுக்க ரூ.20-ம் வீடியோ எடுக்க ரூ.25-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnew