
பெங்களூருக்கு தப்பிச்செல்ல முயன்ற பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் Twin throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.
தனது இருசக்கர வாகனத்தில் நீண்ட தூரம் பயணித்தும், சாகசங்கள் செய்தும் 2கே கிட்ஸ் மனதில் இடம் பிடித்தவர் டிடிஎப் வாசன்.
கடந்த 14-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபரான ஜி.பி.முத்து கோவை வந்திருந்த போது அவரை சந்தித்த டிடிஎப் வாசன், தனது பைக்கில் அமர வைத்து அதிவேகமாக பைக்கை ஓட்டினார்.
அந்த வீடியோ இணையதளத்தில் படுவைரலானது. சாலை விதியை மீறி அதிவேகமாக சென்றதாக பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாதது, ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் என பல பிரிவுகளில் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெங்களூருக்கு தப்பிச்செல்ல முயன்ற TTF வாசனை கோவை சூலூர் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு காவல் நிலைய பிணையில் விடுவித்துள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust