‘பார்முலா 1’ காரை உருவாக்கிய பால் வியாபாரி - வைரல் வீடியோ

ரோட்ஸ் ஆஃப் மும்பை ட்டுவிட்டரில் வெளியிட்டு நீங்கள் பார்முலா 1 டிரைவராக ஆக விரும்பலாம் ஆனால் பால் வியாபாரம் செய்ய குடும்பம் வலியுறுத்துகிறது என்று பதிவிட்டுள்ளனர்.
Formula One car
Formula One carTwitter
Published on

நவீன உலகின் தேவைகளே நம்மை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கின்றன. விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள் எனப் பலரும் தேவையின் அடிப்படையில் புதிய புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியக் கண்டுபிடிப்பாளர்கள் மிகவும் புதுமையானவர்கள். கடந்த காலங்களில், வீட்டில் சொந்த உபயோகத்திற்காக விதவிதமான வகையில் வாகனம் தயாரித்து ஆச்சரியப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பால் வியாபாரி ஒருவர் ‘பார்முலா 1’ காரை உருவாக்கி தனது சொந்த வியாபாரத்திற்குப் பயன்படுத்தி வருகிறார். அந்த நபர் தனது பார்முலா 1 காரை பயன்படுத்தி கேன்களில் நிரப்பப்பட்ட பாலை விநியோகம் செய்கிறார்.

இதனைச் சாலையில் சென்றுகொண்டிருக்கும் நபர் ஒருவர் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை ரோட்ஸ் ஆஃப் மும்பை ட்டுவிட்டரில் வெளியிட்டு நீங்கள் பார்முலா 1 டிரைவராக ஆக விரும்பலாம் ஆனால் பால் வியாபாரம் செய்ய குடும்பம் வலியுறுத்துகிறது என்று பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ இதுவரை 1. 2 மில்லியன் பார்வையாளர்களுக்கும் அதிகமாக பகிரப்பட்டுள்ளது. மேலும் 2,750 ரீவீட்கள் மற்றும் 18,000 லைக்குகளை பெற்றுள்ளது. மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவை வீடியோவைப் பார்த்து அவருக்கு ஒரு காரை பரிசளிக்கவும் பரிந்துரை செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Formula One car
ஆனந்த் மகிந்திராவின் பொங்கல் கலாய் ட்விட் - “போடா டேய்”

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com