டெல்லியில் பிச்சை எடுக்கும் நபர் ஒருவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. காரணம் இவர் பார்ப்பதற்கு மாடல் போல இருப்பது தான்.
கையில் ஊன்றுகோலுடன் சிக்னலில் நடந்து செல்பவரை அங்கு வாகனத்தில் காத்திருந்த கவால்ஜீத் சிங் பேடி புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தைத் தனது டிவிட்டர் பக்கத்தில் 'டெல்லி பெக்கர்ஸ்' என்ற தலைப்புடன் பகிர்ந்திருந்தார்.
புகைப்படத்தில் இருக்கும் நபர் ஒரு கருப்பு நிற டி ஷர்ட், கூலர்ஸ் போட்டுக்கொண்டு ஊன்றுகோலின் உதவியுடன் நடந்து வருகிறார். இந்த புகைப்படத்தை பேடி பகிர்ந்ததிலிருந்து, இணையவாசிகள் பலரும் கமென்ட் செய்துவருகின்றனர்.
ஒருவர் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு இவரை ஹிரிதிக் ரோஷன் லைட், ஆதித்தியா ராய் கபூர், கபீர் சிங் மற்றும் புஷ்பா படத்தில் வரும் அல்லு அர்ஜுன் போல இருப்பதாக கமென்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
ஆனால் ஒரு சிலர் இவர் பார்ப்பதற்கு பிச்சைக்காரர் போல இல்லையே என கேள்விகளை எழுப்ப, அந்த சிக்னலில் அவர் பிச்சை கேட்கும் வீடியோவை பகிர்ந்தார் பேடி. இந்த வீடியோ பேடியின் காரில் இருந்த டேஷ் கேமராவில் பதிவாகியிருந்தது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust