பணியாளர் கையை கடித்த பயணி: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் - என்ன நடந்தது?

மற்ற பயணிகளும், விமான பணியாளர்களும் அவரை கட்டுப்படுத்த முயன்றும் தகராறு நிற்கவில்லை. ஒரு கட்டத்தில் பணியாளர் ஒருவர் அந்த நபரை பலமாக தாக்க துவங்கிவிட்டார்.
turkish airlines
turkish airlinesTwitter
Published on

போதையில் விமான பணியாளரின் கையை கடித்ததால் டர்கிஷ் ஏர்லைன்ஸ் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இஸ்தான்புல்லிருந்து ஜகார்டா நோக்கி துருக்கி விமானம் ஒன்று இயக்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த முகமது பௌதேவின் என்பவர் மதுபோதையில் விமானத்திற்குள் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இவர் இந்தோனேசியா நாட்டை சேர்ந்தவர்

turkish airlines
Cannibalism: போதையில் கொலை செய்து உடலை சமைத்து சாப்பிட்ட நபர் - எங்கே?

இதனால் விமானத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. அவரை சமாதானம் செய்ய வந்த விமான பணியாளருக்கும் இவருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் அந்த மதுபோதை ஆசாமி விமான பணியாளரின் கையை கடித்துவிட்டார்.

இதில் பணியாளருக்கு அவரது சுண்டுவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற பயணிகளும், விமான பணியாளர்களும் அவரை கட்டுப்படுத்த முயன்றும் தகராறு நிற்கவில்லை. ஒரு கட்டத்தில் பணியாளர் ஒருவர் அந்த நபரை பலமாக தாக்க துவங்கிவிட்டார்.

இதனால் உடனடியாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. கோலானாமு என்ற இடத்தில் தரையிறக்கப்பட்ட விமானத்திலிருந்து முகமத்தை வெளியேற்றிய பின்னர் மீண்டும் விமானம் இயக்கப்பட்டது. இதனால், மாலை 5 மணிக்கு ஜகார்டா வந்து சேரவேண்டிய விமானம் இரவு 8 மணிக்கு வந்து சேர்ந்தது.

கோலனாமு சுகாதார நிலையத்தில் முகமத்திற்கு சிகிச்சையளிக்கப்பட்ட பிறகு, அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

turkish airlines
போதையில் நாயை கடித்த ஆசாமி, போலீசாரை தாக்கிய பெண் - ஓர் வினோத சம்பவம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com