12.5 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தர் சிலை திருட்டு - என்ன நடந்தது?

114 கிலோ எடையுள்ள இந்த வெண்கல சிலை செப்டம்பர் 18 அன்று அமெரிக்காவின் பரகாத் கேலரியிலிருந்து அதிகாலை 3:45 மணியளவில் திருடப்பட்டதாக லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறை தெரிவித்துள்ளது.
 INR 12.5 crore ancient Buddha statue stolen from US Art Gallery!
INR 12.5 crore ancient Buddha statue stolen from US Art Gallery!Twitter

1.5 மில்லியன் டாலர் (சுமார் 12.5 கோடி ரூபாய்) மதிப்புள்ள பல நூற்றாண்டுகள் பழமையான ஜப்பானிய வெண்கல புத்தர் சிலை கடந்த வாரம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆர்ட் கேலரியில் இருந்து திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

114 கிலோ எடையுள்ள இந்த வெண்கல சிலை செப்டம்பர் 18 அன்று அமெரிக்காவின் பரகாத் கேலரியிலிருந்து அதிகாலை 3:45 மணியளவில் திருடப்பட்டதாக லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த திருட்டு சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 25 நிமிடங்கள் இருக்கும் அந்த வீடியோவில் ஒரு திருடன் தனியாக அத்தனை எடையுள்ள புத்தர் சிலையை இழுத்துச் சென்றது பதிவாகியிருந்தது. இதனை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

 INR 12.5 crore ancient Buddha statue stolen from US Art Gallery!
Travel: உலகின் இரண்டாவது பெரிய முருகன் சிலை அமைந்திருக்கும் Batu குகைகளை பற்றி தெரியுமா?

கேலரியின் இணையதளத்தில் உள்ள சிலையின் விளக்கத்தை பார்த்தால், இந்த வெண்கல சிற்பம் ஒரு சமயத்தில் இந்த கோவிலின் முக்கிய தெய்வமாக இருந்திருக்கக்கூடும் என கூறப்பட்டிருக்கிறது.

ஜப்பானின் எடோ காலத்தில் (1603-1867) உருவாக்கப்பட்ட, சுமார் 4 அடி உயரமுள்ள, ஒளிவட்டத்துடன் கூடிய அமர்ந்த புத்தர் உருவம் கொண்ட அரிய வகை கலைப்பொருள் அது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கேமரா காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.

 INR 12.5 crore ancient Buddha statue stolen from US Art Gallery!
எரிமலையின் உச்சியில் அமைந்திருக்கும் விநாயகர் சிலை - எங்கே?

ஆர்ட் கேலரி உரிமையாளர் இது குறித்து கூறுகையில்,

”அந்த கலை பொருள் அரங்கத்தின் வெளிப்புற இடத்தில் பிரதானமாக வைக்கப்பட்டிருப்பதால், இந்த திருட்டு திட்டமிட்டு நடந்திருக்கலாம் என கூறுகிறார்.

இந்த சிலை பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற ஐம்பூதங்களை அடக்கிய ஆன்மீக உணர்வுடன், ஒருமைப்பாட்டைக் குறிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டது” என்று தெரிவித்திருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com