

அரசர் சார்லஸின் ஆட்சி குறுகிய காலமே இருக்கும், அவருக்கு பதிலாக இளவரசர் ஹாரி இங்கிலாந்தின் அரசராக நியமிக்கப்படுவார் என நோஸ்ட்ராடாமஸ் கணித்திருக்கிறார்.
இங்கிலாந்தை 70 ஆண்டுகாலமாக ஆட்சி புரிந்து வந்த அரசி 2ஆம் எலிசபெத், கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இவருக்கு பிறகு, இவரது மகனும் இளவரசருமான மூன்றாம் சார்லஸ் அரசராகியுள்ளார்.
இவரது மனைவி கமீலா இங்கிலாந்தின் அரசி ஆனார். ராணி எலிசபெத் அணிந்திருந்த கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் இப்போது கமீலாவுக்கு சொந்தமாகியுள்ளது.
கடந்த வருடம் டிவிட்டரில் ஒருவர், இங்கிலாந்து அரசி எலிசபெத், செப்டம்பர் 8 அன்று உயிரிழப்பார் என கணித்திருந்தது, ராணியின் மறைவுக்கு பின்னர் வைரலானது.
இந்நிலையில், 16 ஆம் நூற்றாண்டின் சிறந்த ஆருடம் கூறும் நபரான நோஸ்ட்ராடாமஸ் அரசர் மூன்றாம் சார்லஸ் குறித்து கணித்துள்ள விஷயம், இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நோஸ்ட்ராடாமஸ் கணிப்பின் படி, அரசர் மூன்றாம் சார்ல்ஸ், நீண்ட காலம் ஆட்சியில் இருக்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டிருகிறது.
மைக்கல் டி நோஸ்ட்ராடாம் எழுதிய குறிப்புகள் நோஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும். அதில், "அரசர் மூன்றாம் சார்லஸ் குறுகிய காலத்திற்கு மட்டுமே அரசராக இருப்பார். அவருக்கு பதிலாக இளவரசர் ஹாரி அரசாக நியமிக்கப்படுவார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
நோஸ்ட்ராடாமஸ் குறித்து ஆராய்ந்து வருபவர் மேரியோ ரீடிங். 1555 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நோஸ்ட்ராடாமஸ் கவிதைகளில் ராணியின் மரணம் கணிக்கப்பட்டிருந்ததாக மேரியோ கூறுகிறார்.
"ராணி இரண்டாம் எலிசபெத் 2022 ஆம் ஆண்டில், தனது தாயின் ஆயுட்காலத்தை விட ஐந்து ஆண்டுகள் குறைவாக, சுமார் தொண்ணூற்றாறு வயதில் இறப்பார்" என்று நோஸ்ட்ராடாமஸின் கவிதைகள் கூறுகின்றன. மேலும் 2022ல் அரசர் சார்லஸ் அரியணை ஏறும்போது அவருக்கு 74 வயது இருக்கும் என்றும் , அவரது ஆட்சிக் காலத்தில் காமன்வெல்த்தின் நாடுகள் பிரிந்து செல்லும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை விட முக்கியமாக நோஸ்ட்ராடாமஸ் குறிப்புகள் கூறுவது, அரசர் சார்லஸ் தன் வயது முதிர்வு காரணமாக பதவி விலகுவார். அவருக்கு பதிலாக யாரும் எதிர்பார்க்காத ஒருவர் அரியணை ஏறுவார் எனவும் குறிப்புகள் கூறுகின்றன. அந்த நபர் இளவரசர் ஹாரி என்றும் நோஸ்ட்ராடாம் கணித்துள்ளதாக ரீடிங் விளக்குகிறார்.
இதற்கிடையில், ராணியின் மரணத்தை கணித்த அதே நபர், அரசர் மூன்றாம் சார்லஸின் மரணத்தையும் கணித்திருப்பது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust