

பொது இடங்களில் காதலர்களின் அட்ராசிட்டியை பார்க்க முடியாது. நாகரீகமான முறையில் தங்களின் காதல்களை வெளிப்படும் காதலர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
சிலர் தங்கள் காதலன் அல்லது காதலி மீதான அதீத அன்பை வேடிக்கையாக வெளிப்படுத்துவர், அது சில சமயங்களில் நகைச்சுவையாக முடியும்.
பொது இடங்களில் எந்த கூச்சமும் இல்லாமல் தன்னை தாங்கிக்கொள்ளும் காதலன் எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை. அப்படி ஒரு காதலன் டேட்டிங் சென்ற இடத்தில் தனது காதலின் தலைமுடியில் இருந்து பேன் எடுக்கிறார்.
அது வீடியோவாக இன்ஸ்டாகிராமில் ghantaa என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவுக்கு கேப்ஷனாக 'பண்பாட்டின் நாயகன்' என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த வீடியோ 170,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. பலர் அதைப் பற்றி சில வேடிக்கையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சிலர் இதை உண்மையான காதல் என்று அழைத்தாலும், சிலர் இதை மிகவும் வேடிக்கையாகப் பார்த்து வருகின்றனர்.
ஒரு பயனர், "நான் உங்களுக்கு பேன் மருந்து வாங்கித் தருகிறேன்" என்றார். மற்றொரு பயனர் இந்த ஆண்டின் சிறந்த காதலன் என்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust