

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் விமானி ஒருவர், தான் இயக்கிய விமானத்தை இடித்து விபத்துக்குள்ளாக்கி விடுவேன் என மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விமானத்தை கடத்தி வைத்து பல காரணங்களுக்காக மிரட்டிய சம்பவங்கள் நாம் கேள்விப்பட்டதுண்டு. இங்கும் ஒருவர் விமானத்தை வால்மார்ட்டின் மீது இடித்துவிடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளார்.
கோரி வெய்ன் பேட்டர்சன் என்ற 29 வயது நபர் டுபெலோ விமான நிலையத்தில் கேஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து வருகிறார். டுபெலோ விமான நிலையத்தில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பொறுப்பில் இருக்கிறார் கோரி.
சம்பவம் நடந்த அன்று, கோரியிடம் சில விமானம் குறித்த அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டது. ஆனால், எந்த வித முன் அனுபவமும் இல்லாத கோரி, விமானத்தை, இயக்கத் துவங்கியதாக கூறப்படுகிறது.
விமானத்தை இயக்குவதற்கான உரிமத்தையும் கோரி பெறவில்லை என்றும் டுபெலோ போலீஸ் அதிகாரி ஜான் குவாக்கா தெரிவித்தார்.
பீச்கிராஃப்ட் கிங் ஏர் C90A என்ற விமானத்தை தான் கோரி இயக்கியுள்ளார். உள்ளூர் நேரப்படி, அதிகாலை 5 மணிக்கு பிறகு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோரி விமானத்தை இயக்கிக்கொண்டிருக்கையில், 911க்கு தொடர்புகொண்டு விமானத்தை வால்மார்ட்டின் மீது மோத திட்டமிட்டுள்ளதாக எச்சரித்திருக்கிறார்.
ஆனால், காலை 9.30 மணியளவில், விமானத்தின் எரிபொருள் தீரத் துவங்கியுள்ளது. இதற்கிடையில், கோரியிடம் பேச்சுவார்த்தை நடத்த, ஒரு விமானி உள்பட ஒரு குழுவை தயார் செய்தனர் விமான நிலைய அதிகாரிகள். மேலும், வால்மார்ட் மற்றும் அருகிலிருந்த இடங்களிலிருந்த பொது மக்களையும் விரைவாக வெளியேற்றினர்.
அதன் பிறகு சுமார் 45 நிமிடங்கள், விமான நிலைய அதிகாரிகளுக்கும் கோரிக்கும் இடையில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் 10.15 மணியளவில் மீண்டும் தொடர்பு கிடைத்த போது, கோரி அருகிலிருந்த ஓர் வயலில் விமானத்தை தரை இறக்கியது உறுதி செய்யப்பட்டது.
சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்ட கோரி மீது திருட்டு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கோரியின் இந்த செயலுக்கான காரணத்தை தெரிந்துகொள்ள விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust