

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் தீவிரமடைந்த நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனிடையே, போராட்டக்காரர்கள் மற்றும் ராஜபக்சே ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில் ஆளுங்கட்சி எம்.பி. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கையின் பல இடங்களில் அசாதாரண சூழலும் பதற்றமும் அதிகரித்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp