

தாய்லாந்து எக்கச்சக்க சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய நாடு என்பது நாம் அறிந்ததே.
பாலியல் சுற்றுலா, இயற்கையழகு, யானைகளைத் தவிர பயணிகளை ஈர்க்குக் மற்றொரு முக்கிய அம்சம் அந்நாட்டின் கலாச்சாரம்.
எப்போது கொண்டாட்டங்களில் திளைத்திருக்கும் தாய்லாந்தில் சில திருவிழாக்கள் மிக விசித்திரமானதாக இருக்கும். அவற்றில் சில மாயாஜால விழாக்கள் குறித்து இப்போதுப் பார்க்கலாம்.
வருடபிறப்பை முன்னிட்டு கொண்டாடப்படும் சோங்க்ரான் மிகவும் பிரபலமான திருவிழா ஆகும். இந்த கொண்டாட்டத்தில் தண்ணீர் தான் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஏப்ரல் 13 முதல் 15 வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கொண்டாட்டத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக முக்கிய இடங்களில் கூடி, ஒருவர் மற்றவர் மீது தண்ணீர் ஊற்றி விளையாடுகின்றனர்.
சத்தமான பாடல்களுக்கு நடனமாடியபடி தண்ணீர் ஊற்றி விளையாடும் போது தாய் மக்கள் எல்லோரும் குழந்தைகளாகவே ஆகி விடுகின்றனர்.
லோய் க்ரதோங் தாய்லாந்தின் முக்கிய விழாக்களில் ஒன்று. இது தாய் மக்களின் ஒளித் திருவிழா.
ஆண்டின் கடைசி மாதத்தின் பௌர்ணமி நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
வாழைப்பட்டைகளில் தீபம், மெழுகுவர்த்தி மற்றும் பூக்களை வைத்து ஆறு, ஏரி என எதாவது ஒரு நீர்நிலையில் தள்ளிவிடுவது இந்த விழா. ஆமாம் விளக்குப் போடுவது தான்!
ஆனால் தாய்லாந்தில் இது மதம் சார்ந்த திருவிழா இல்லை.
இதனால் அந்த தண்ணீருடன் தீமைகளும் துரதிஷ்டமும் மறைந்துவிடும் என்பது அந்த மக்களின் நம்பிக்கை.
லோய் க்ரதோங் போன்ற விளக்குத்திருவிழா தான் இதுவும். ஆண்டின் கடைசி மாதம் பௌர்ணமியில் இந்த விழா நடைபெறுகிறது. ஆனால், தாய்லாந்து காலண்டர் படி!
விளக்கு இந்த விழாவில் நீரில் அல்லாமல் ஆகாயத்தில் விடப்படுகிறது.
தாய்லாந்தின் மிக அழகிய திருவிழா என்றால் அது யி பெங் தான். வானில் ஆயிரக்கணக்கான விளக்குகள் பலூன்களைப் போல பறக்கும் மாயாஜாலக் காட்சியைக் காணலாம்.
கலாசாரப்படி, துறவிகள் விளக்குகளை வானில் செலுத்தும் இந்தத் திருவிழாவில் பொதுமக்களும் கலந்துகொண்டு பேப்பர் விளக்குகளால் இருளுடன் போட்டிப் போடுகின்றனர்.
இந்த திருவிழா கடந்த காலத்தின் துயரங்கள் அனைத்தையும் விடுத்து புதிய வாழ்வைத் தொடங்க உதவுகிறது.
புத்த கலாச்சாரம் மற்றும் புத்தத்துக்கு முந்தைய நம்பிக்கைகள் இணையுமிடமாக இந்த திருவிழா இருக்கிறது.
இது மூன்று நாட்கள் நடைபெறும், வெள்ளிக்கிழமை பேய்திருவிழா, சனியில் பாடல்கள் மற்றும் ஃபேஷன் ஷோக்கள் மற்றும் ஞாயிறு புத்த சடங்குகள் நடைபெறும்.
பேய்த்திருழாவில் மக்கள் வண்ணமயமான உடைகள் மற்றும் பயமுறுத்தும் மேக்அப்புடன் கலந்து கொள்வர்.
இறந்தவர்களும் உயிருடன் இருப்பவர்களும் இணைந்து கொண்டாடுவது தான் இந்த திருவிழா என்பது நம்பிக்கை.
மழை வருவதற்காக கடவுளை வேண்டிக்கொள்ளும் கலாச்சாரம் எல்லா விவசாய சமூகங்கள் மத்தியிலும் இருப்பது போல தாய்லாந்திலும் இருக்கிறது.
தாய்லாந்து மக்கள் தாங்களே ராக்கெட் செய்து அதனை வானில் ஏவுவதன் மூலம் கடவுளை வேண்டுகின்றனர்.
ராக்கெட் செய்து அதனை ஊர்வலமாக கிராமம் முழுவது எடுத்து வந்து வானில் ஏவுகின்றனர். அதிக தொலைவு செல்லும் ராக்கெட்டை ஏவியவர்களுக்கு பரிசும், குறைந்த தொலைவு ஏவுபவர்களுக்கு தண்டனையும் கொடுக்கப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust