

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இளம்பெண் ஒருவர் கல்லறையில் பணியாற்றி அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறார். மார்னிங் போஸ்ட் படி, டான் என்ற குடும்பப்பெயர் கொண்ட பெண் சீனப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
டிக்டாக்கில் டான் அடிக்கடி தனது பணியிடத்தின் கிளிப்களைப் பகிர்ந்து கொள்வார். சீனாவின் சோங்கிங்கில் உள்ள மலையோர கல்லறையில் தான் செய்யும் வேலையை வீடியோவாக பகிர்ந்து கொள்வார்.
22 வயதான அவர் தோராயமாக 4,000 யுவான் (ரூ 45,760) சம்பாதிக்கிறார்.
டான் வாரத்தில் ஆறு நாட்கள் காலை 8.30 முதல் மாலை 5 வரை வேலை செய்கிறார். பணி நேரத்தை சமநிலை செய்ய இந்த வேலையை தேர்வு செய்ததாகவும், தேவையற்ற அலுவலக அரசியலை தவிர்ப்பதாகவும் டான் கூறுகிறார்.
இது ஒரு எளிமையான மற்றும் மெத்தனமான வேலை என்று டான் சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டிடம் கூறியிருக்கிறார்.
”நான் இங்கேயே இருப்பதால் என்னை 'கல்லறை காவலர்' என்று அழைக்கிறார்கள்.”
அந்த வேலை போதுமான ஓய்வு நேரத்தையும், அமைதியான மனநிலையையும், தேவையற்ற அலுவலக அரசியலையும் தவிர்ப்பதாக டான் தெரிவித்திருக்கிறார்.
இறந்தவர்களின் உறவினர்கள் சார்பாக கல்லறைகளைத் துடைப்பது, கல்லறைக்கு வருபவர்களை உபசரிப்பது போன்றவை டானின் வேலைகள்.
இது தொடர்பான வீடியோக்களை டான் டிக்டாக்கில் பதிவேற்றி வருவார். இவரின் வேலை நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust