Priyadharshini R
மலையாள தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் தமிழ் நடிகை மேனகா ஆகியோரின் மகள் தான் கீர்த்தி சுரேஷ்.
2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.
2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதில் அவர் இரட்டை வேடத்தில் நடித்தார்.அவரது செமஸ்டர் இடைவேளையின் போது கீதாஞ்சலிக்காக படப்பிடிப்பு நடந்தது.
2014 ஆம் ஆண்டில், கீர்த்தியின் அடுத்த படம் ரிங் மாஸ்டர் வெளியானது. அதில் அவர் பார்வையற்ற பெண்ணாக நடித்தார். கீதாஞ்சலியில் இரட்டை வேடத்தில் நடித்ததை விட இது மிகவும் சவாலானது என்று அவர் கூறினார்.இந்தத் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது
2015 இல், கீர்த்தி இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் அவரது முதல் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
2015 ஆம் ஆண்டு அவரது பிஸியான ஷெட்யூல், காரணமாக மானே தானே பாயே மற்றும் கவலை வேண்டம் உட்பட, அவர் ஏற்கனவே வேலை செய்யத் தொடங்கிய படங்களில் இருந்து விலக வேண்டியிருந்தது.
சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன் மற்றும் ரெமோ ஆகிய இரண்டு படங்களில் பணிபுரிந்தார்.
அதே நேரத்தில் தனுஷுடன் இணைந்து பிரபு சாலமனின் தொடரி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
ஜனவரி 2017 இல், கீர்த்தி, நடிகர் விஜய்க்கு ஜோடியாக, பைரவா படத்தில் நடித்திருந்தார்.அதன் பின்னர் முன்னணி நடிகையாக வளர்ந்த கீர்த்தி சுரேஷ் பல படங்களில் அடுத்தடுத்து கால்ஷீட் கொடுத்தார்.