விஷால் வீட்டில் மர்மநபர்கள் தாக்குதல் - சிசிடிவி காட்சிகளுடன் புகார்

Priyadharshini R

பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான ஜி கே ரெட்டி-யின் மகன் விஷால்.

நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து திரைத்துறைக்குள் அறிமுகமான விஷால் ஹீரோவாக கலக்கி வருகிறார்.

சென்னை அண்ணா நகரில் நடிகர் விஷால் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று இரவு சிகப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடிகர் விஷால் வீட்டில் கல் எறிந்துள்ளனர்

இதனைத்தொடர்ந்து மர்ம நபர்கள் தாக்குதல் குறித்து நடிகர் விஷால் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நடிகர் விஷால் சார்பாக அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதற்கு ஆதாரமாக விஷால் வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி வீடியோகள் சமர்பிக்கப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.