Keerthanaa R
திருச்சூரில் பிறந்த கார்த்திகா மேனன் எனும் பாவனா, 16 வயதில் 'நம்மள்' என்ற மலையாள படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
ஐந்து வயது இருக்கும்போதே, 'என்டே சூர்யபுத்ரிக்கு' என்ற படத்தில் வரும் நடிகை அமலாவை போலவே, கண்ணாடி முன் நின்று நடித்து பார்ப்பாராம்!
ஒரு முறை என்டே சூர்யபுத்ரிக்கு' என்ற படத்தில் அமலா மாடியிலிருந்து குதிப்பதுபோல தானும் குதிக்க முயற்சித்துள்ளார் பாவனா.
நம்மள் படத்திற்காக Kerala State Special Jury Award ஐ வென்றார் பாவனா. அதன் பிறகு இவருக்கு மலையாள சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தன.
சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழில் அறிமுகமான பாவனா, வெயில், கூடல் நகர், ஜெயம் கொண்டான், தீபாவளி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்
மாதவனுடன் ஆர்யா என்ற படத்தில் மிரட்டும் ஹீரோயினாக நடித்திருப்பார் பாவனா. இந்த படத்தில் இவருக்கும், வைகை புயல் வடிவேலுவுக்கும் இடம்பெற்ற kidnap காட்சி, அதன் வசனங்கள் இன்று வரை நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறோம்
ஆர்யா படத்திற்கு பிறகு, மாதவனுடன் வாழ்த்துகள் என்ற படத்தில் நடித்திருந்தார் பாவனா
2010ல் அசல் படத்தில் அஜித்துடன் இணைந்த பாவனா, அதே வருடத்தில் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமாருக்கு ஜோடியாக ஜேக்கி என்ற படத்தில் நடித்தார்
ஜேக்கி படம் மூலம் கன்னட சினிமாவில் கால் பதித்த பாவனா, தொடர்ந்து கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வந்தார்.
2018ஆம் ஆண்டு கன்னட பட தயாரிப்பாளர் நவீனை கரம் பிடித்த பாவனா, இப்போது இரண்டு மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.