Atlee - Priya : Pregnancy -ஐ அறிவித்த நட்சத்திர தம்பதி!

Priyadharshini R

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அட்லீ.

ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார்.

தற்போது, பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானை வைத்து "ஜவான் " என்ற படத்தை இயக்கி வருகிறார்.

நடிகை பிரியாவை கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி அட்லீ காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மனைவியுடன் இணைந்து 'A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார் அட்லீ.

இந்த நிலையில் அட்லீ மற்றும் பிரியா அட்லீ இருவரும் பெற்றோர்கள் ஆக போகிறார்கள் என்ற செய்தியை பகிர்ந்துள்ளனர்.

பிரியா அட்லீயின் கர்ப்பகால புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.