NewsSense Editorial Team
வேலூர் மாவட்டத்தில் பிறந்த பூர்ணிமா ரவி, தனது பள்ளி படிப்பை அங்கேயே முடித்துள்ளார்.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஐ.டி துறையில் பணியாற்றி வந்துள்ளார்.
மாதம் 25000 ரூபாய்க்கு வேலை செய்துவந்துள்ள பூர்ணிமா, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு, இணையத்தள யூடியூப் சேனல் ஒன்றிற்கு பார்ட் டைம்மாக நடித்துகொடுத்து வந்துள்ளார்.
அதன் பின்னர் யூடியூப் மூலம் பிரபலமான பூர்ணிமா ரவி தனது ஐடி வேலையை விட்டுவிட்டு சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளார்.
சின்னத்திரையோடு நிறுத்திவிடாமல் நடிகர் ரியோ ராஜ் நடித்த பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படத்தில் நடித்து வெள்ளித்திரையில் நுழைந்தார். இப்படத்தில் இவர் நடிகர் பாலா சரவணனின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று தமிழ் திரையுலகில் பலர் மத்தியில் இன்னும் அறிமுகமாகியிருக்கிறார் பூர்ணிமா ரவி.
பிக்பாஸில் கலந்துக்கொள்வதற்கு முன்பாகவே பூர்ணிமா நயன்தாராவின் ‘அன்னபூரணி’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.