விக்ரம் : விஜய் சேதுபதியின் Mass புகைப்படங்கள் வைரல் | Visual Story

Antony Ajay R

நாளை ரீலீஸாக இருக்கும் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்திருக்கின்றனர்.

இதில் விஜய் சேதுபதியின் காதப்பாத்திரத்தின் பெயர் சந்தனம் எனக் கூறப்பட்டிருக்கிறது.

ஆக்‌ஷன் படமான விக்ரமில் விஜய் சேதுபதி கேங்ஸ்டராக நடித்திருக்கிறார்.

விக்ரம் வேதா முதலிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் சிறந்த கேங்ஸ்டர்களில் ஒருவராக திகழ்கிறார் விஜய் சேதுபதி.

நட்சத்திர பட்டாளத்தைத் தாண்டி விக்ரம் திரைப்படம் அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்காகவும் எதிர்பார்ப்பைப் பெற்றிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் இரண்டாவது படம் விக்ரம். ஏற்கெனவே விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்திருப்பார் விஜய் சேதுபதி.

பேட்ட படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்த விஜய் சேதுபதி விக்ரமில் கமல்ஹாசனுடன் இணைந்திருக்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் எந்த மாதிரி அமைந்திருக்கும் என்பதை அரிய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.