Priyadharshini R
இது ஒரு பொன்மாலை பொழுது
நிழல்கள் படத்திலிருந்து இது ஒரு பொன்மாலை பொழுது பாடல், இளையராஜா இசையில் ஓர் மிகப்பெரிய ஹிட் பாடல்.
இளைய நிலா பொழிகிறதே
தேனினும் தெவிட்டாத பாடல்களில் ஒன்று. இந்த பாடலை கேட்காத பயணங்களே இருக்க முடியாது
ராஜராஜ சோழன் நான்
பயணத்தின்போது இந்த பாடல் கேட்டால் நம் மனதில் உள்ள பாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக நெகிழச் செய்யும்.
கண்ணே கலை மானே
மூன்றாம் பிறை படத்தில் இடம் பெற்றிருக்கும் இப்பாடல் மனதை இளக செய்யும்.
மன்றம் வந்த தென்றலுக்கு
மவுன ராகம் படத்தில் வரும் இந்த பாடல் ஒவ்வொரு முறையும் மனதை வருடிச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை
என்ன சத்தம் இந்த நேரம்
புன்னகை மன்னன் படத்தில் வரும் என்ன சத்தம் இந்த நேரம் பாடல், நம் அனைவரையும் கவர்ந்த பாடல்
ஆகாய வெண்ணிலாவே
இந்த பாடல் இரவு நேர பயணங்களை இனிதாக்கும் பாடல்களில் ஒன்று.
ஒரு ஜீவன் அழைத்தது
கீதாஞ்சலி படத்தில் வரும் ஒரு ஜீவன் அழைத்தது, நம் ஜீவனை இசைக்கடலுக்குள் அழைத்துச் சென்று மூழ்கடித்துவிடும்.
பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
மண் வாசனை படத்தில் வரும் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடல், பயணத்தை இனிமையாக்கும்
நீ பாதி, நான் பாதி கண்ணே
கேளடி கண்மணி படத்தில் வரும் நீ பாதி, நான் பாதி பாடல் நம் மனதில் சிம்மாசனம் போட வைக்கும்