Malavika Mohanan's classy black & white outfits | Visual Story

Keerthanaa R

மாளவிகா மோகனன் ஒளிப்பதிவாளர் K U மோகனின் மகள். இவர் நடித்த முதல் திரைப்படம், மலையாளத்தில் வெளிவந்த 'பட்டம் போலே'. இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா

பட்டம் போலே திரைப்படத்திற்கு பிறகு மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் லீட் ரோலில் நடித்து வந்த மாளவிகா, 'Beyond the Clouds' என்ற இந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Beyond the Clouds திரைப்படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மாளவிகாவிற்கு பாராட்டுக்கள் குவிந்தது.

'பேட்ட' திரைப்படம் மூலம் தமிழுக்குள் காலடி எடுத்துவைத்த மாளவிகா, லோகேஷ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில் தளபதி விஜயுடன் இணைந்தார்.

தன் தந்தையை போல ஒளிப்பதிவாளராகவோ, அல்லது இயக்குநராகவோ திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்தவருக்கு, மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மூலம் படங்களில் நடிக்க வாய்ப்பு ஏற்பட்டது.

மம்மூட்டி நடிக்கவிருக்கும் ஒரு விளம்பர படப்பிடிப்பை காண சென்றபோது, மம்மூட்டி, இவருக்கு படங்களில் நடிக்க விருப்பமா என்று கேட்டறிந்த பிறகு, துல்கருடன் பட்டம் போலே திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார்.

இவர் படங்களில் அறிமுகமான காலக்கட்டத்தில், நடிப்பு மட்டுமில்லாமல் 'தி ஸ்கார்லெட் விண்டோ' என்ற புட்டீக்கையும் நடத்தி வந்தார்.

நிர்ணயகம், நாளே, நானு மத்து வரலக்ஷ்மி போன்ற திரைப்படங்களில் மாளவிகா நடித்திருக்கிறார்.

தி கிரேட் ஃபாதர் என்ற மலையாள படத்திற்கு பிறகு, பியான்ட் தி கிளவுட்ஸ் என்ற இந்தி திரைப்படத்தில் 2017ல் அறிமுகமானார்.

2018ல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.