Manivannan : மணிவண்ணன் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

Priyadharshini R

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநராகவும் கதை-வசன எழுத்தாளராகவும் நடிகராகவும் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருப்பவரான மணிவண்ணன் பிறந்த நாள் இன்று.

திரைப்பட துணை நடிகராக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மணிவண்ணன்

திரைக்கதை எழுத்தாளராக தமிழ் திரையில் அறிமுகமாகி இயக்குனராக மணிவண்ணன் பல வெற்றி படங்களை கொடுத்து புகழ் பெற்றவர்.

இயக்குநர் பாரதிராஜாவுக்கு, ’கிழக்கே போகும் ரயில்’ பற்றி எழுதிய விமர்சனக் கடிதம் வழியே அவரது அறிமுகத்தைப் பெற்ற மணிவண்ணன் அவரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்திருக்கிறார்.

பாரதிராஜா இயக்கத்தில் 1980 இல் 'நிழல்கள்' படத்தின் கதை - வசனகர்த்தாவாக அறிமுகமானார் மணிவண்ணன்.

இயக்குனராக 50 தமிழ் படங்கள் இயக்கி புகழ் பெற்றுள்ளார். 15 ஆண்டுகளுக்குள் கிட்டத்தட்ட 40 படங்களை இயக்கினார் மணிவண்ணன்.

அரசியல் படங்கள் மட்டுமல்லாமல் மணிவண்ணன் இயக்கிய பெரும்பாலான படங்கள் போகிற போக்கில் அரசியல், சமூக அவலங்களை விமர்சித்தன

'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் முதல்முறையாக இரட்டை வேடங்களில் மணிவண்ணன் நடித்திருப்பார்

மணிவண்ணன் எழுதிய, இயக்கிய திரைப்படங்கள், நடித்த கதாபாத்திரங்கள், இவற்றின் மூலம் தமிழ் மக்கள் மனங்களில் விதைத்த கருத்துகள், சிந்தனைகள் வழியாக என்றென்றும் அழியாமல் வாழ்வார்.