Priyadharshini R
இயக்குநர் பாலு மகேந்திரா, தனுஷை வைத்து 'அது ஒரு கனா காலம்’ படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெற்றிமாறனுக்கும் தனுஷுக்கும் அறிமுகம் ஏற்பட்டது.
தனுஷின் அசுர நடிப்பாலும், சினிமா மீதான அதீத காதலும் வெற்றிமாறனுக்கு தனுஷை நெருக்கமாக்கியது
தனுஷ்- வெற்றிமாறன் வெற்றி கூட்டணிக்கு ஒரு இணைப் பாலமாக இருந்தவர் பாலு மகேந்திரா தான்
இந்த நட்பை தொடர்ந்து வெற்றிமாறன், தனது முதல் படமான ‘பொல்லாதவன்’ படத்தை தனுஷை வைத்து இயக்கினார்
வெற்றிமாறனின் இரண்டாவது படமான ’ஆடுகளம்’ திரைப்படத்திலும் தனுஷ் நடித்தார்
பின்னர் வெற்றிமாறனின் ’வடசென்னை’ படத்தில் தனுஷ் நடிக்க செய்தார். இந்த படம் தனுஷின் திரை வாழ்வில் முக்கியமானதாக அமைந்தது.
இதையடுத்து நான்காவது முறையாக ‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி இணைந்தது
தனுஷ் வாங்கிய இரண்டு தேசிய விருதுகளும் வெற்றி மாறனின் படத்தின் மூலம் தான்.