Priyadharshini R
உப்பு முக்கிய சோடியம் குளோரைடு கொண்ட ஒரு கனிமமாகும். உப்பில் சோடியம் உள்ளது.
பொதுவாக உணவில் உப்பு சேர்க்கப்படுகிறது.
உப்பு நமது உடலுக்கு அவசியம் என்றாலும் அதிகப்படியான உப்பு கொள்வது ஆரோக்கியத்திற்கு பக்க விளைவை ஏற்படுத்தும்.
அதிகப்படியான உப்பு உட்கொள்வதால் ஏற்படும் முக்கியமான விளைவுகளில் ஒன்று இரத்த அழுத்தம் அதிகரிப்பாகும்.
இது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
சிறுநீரகப் பிரச்சினைகள், எலும்பு இழப்பு, தாகம் மற்றும் சுவை உணர்வை பாதிக்கும்.
அதிக உப்பு கொண்ட உணவுகள் வயிற்று புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்க கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உப்பு அதிகமானால், உடலில் நீர் தேங்கி கைகள் மற்றும் கால்கள் போன்ற உடலின் பல்வேறு இடங்களில் வீக்கம் ஏற்படும்.