Priyadharshini R
எங்கிருந்து நாம் ஆரம்பித்தோம் என்று யோசித்தால், நம்ப முடியாத இடங்களுக்கு நாடு சென்றுள்ளதை நாம் கண்டுணர முடியும்
இந்தியா என்ற யானை உறங்கிக் கொண்டிருந்த நிலை மாறிவிட்டது. இப்போது யானை எழுந்து விட்டது
ஒவ்வொரு மொழிக்கும் என ஒரு மகத்துவம் இருக்கிறது. உலகின் மிக தொன்மையான மொழியாக தமிழ் மொழி இருப்பதால், இந்தியாவே பெருமை கொள்கிறது
சுதந்திர தினமும் குடியரசு தினமும் வெறும் கொடியேற்றும் விழாவாக இருக்கக்கூடாது; மக்களின் வளர்ச்சி திருவிழாவாக அமைய வேண்டும்
பெண்களை மதிக்க, பெற்றோர் கற்றுத்தர வேண்டும். ஆண்களைப்போல் பெண்களும் நிரந்தர அதிகாரம் பெறுவார்கள்!
இந்த காலத்தில் இளைஞர்களை இளம் வாக்காளர்களாக மட்டும் பார்ப்பது தவறு; அவர்கள் தற்காலத்தின் சக்தி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எதையாவது கனவு காண்பதற்கு பதிலாக மிகச் சிறந்தவற்றை செய்ய வேண்டும் என்று கனவு காணுங்கள்.
இளைஞர்கள் தங்கள் பெயருக்கு துணைப்பேரை தேடுவது ஒரு பொருட்டல்ல. அவர்கள் எவ்வாறு தங்கள் பெயரை உருவாக்குகிறார்கள் என்பது தான் மிக முக்கியம்
கடுமையான உழைப்பு சோர்வை அளிக்காது; ஆத்ம திருப்தியை தான் அளிக்கும்
நமக்கு மனம் ஒரு பிரச்னை இல்லை; மனப்பான்மை தான் பிரச்னை