பெரியார் 144வது பிறந்த நாள்: பத்து பொன்மொழிகள்

Keerthanaa R

முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். இதுதான் ஜனநாயகம்.

பக்தி என்பதற்கு முட்டாள்தனம், பேராசை, தன்னலம் என்பவை தவிர வேறு சொற்கள் தமிழில் இல்லவே இல்லை

உலகிலுள்ள மதங்கள் எல்லாம் குருட்டு நம்பிக்கை என்கின்ற பூமியின் மீதே கட்டப்பட்டுள்ளன.

பெண்களுக்குக் குத்துச் சண்டை முதற்கொண்டு சொல்லிக் கொடுத்து ஆண்களைப் போலவே வளர்க்க வேண்டும்.

கல்லைக் கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் மனிதனை மற்ற மனிதனுக்குச் சமத்துவமான மனிதனாக்கக்கூடாது?

கடவுளும் மதமும் மனிதன் சிருஷ்டியே, கடவுளும், மதமும் மக்களால் தோற்றுவிக்கப்பட்டனவே அன்றித் தாமாகத் தோன்றியன அல்ல.

நான் சொல்வதை மறுப்பதற்கு உனக்கு உரிமையுண்டு. ஆனால் என்னைப் பேசாதே என்று கூறுவதற்கு உரிமையில்லை

எங்கே விழுந்தாய் என்று பார்க்க வேண்டியதில்லை. எங்கே வழுக்கியது என்று பார்க்க வேண்டும்

பெண்களிடம் கரண்டியைப் பிடுங்கிவிட்டு புத்தகம் கொடுத்தால் போதும்

பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து