தோனி, ரெய்னா, ருதுராஜ் : 1426 நாட்களுக்கு பின் சென்னையில் CSK - இந்த போட்டி ஏன் ஸ்பெஷல்?

Keerthanaa R

சுமார் 1426 நாட்களுக்கு பிறகு சென்னையில் விளையாடுகிறார் இந்திய அணி முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி.

ஐபிஎல் 2023ஆம் பருவம் கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டதில், குஜராத் வென்றது

இந்நிலையில், இரண்டாவது போட்டிக்கு தயாராகியுள்ளது சென்னை அணி. இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. 2019 மே மாதத்திற்கு பிறகு சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டி இது.

சுமார் 1426 நாட்களுக்கு பிறகு சேப்பாக்கத்தில் களமிறங்குகிறார் தோனி. தவிர, சென்னை அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா இல்லாமல் சென்னையில் சி எஸ் கே விளையாடும் முதல் போட்டியும் கூட.

இப்போட்டியில், முதல் முறையாக சென்னையில் விளையாடவுள்ளார் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்குவாட்.

2020ல் கொரோனா பெருந்தொற்று உலகை ஆட்கொண்டதால், துபாயில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன.

2022ல் இந்தியாவில் சில போட்டிகளும் துபாயில் சில போட்டிகளும் நடந்தன. ஆனால், தொற்று பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் இருந்ததால், சென்னையில் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.

இதனால், மூன்று பருவங்கள் கடந்து இன்று சென்னையில் நடக்கிறது சிஎஸ்கே மேட்ச்.

சேப்பக்கத்தில் நடந்த 56 போட்டிகளில் 40 போட்டிகளை சென்னை அணி வென்றுள்ளது.