பிவி சிந்து முதல் ஹர்மன்ப்ரீத் வரை: 2022ல் பதக்கம் வென்ற இந்தியாவின் தங்கப் பெண்மணிகள்

Keerthanaa R

மீரா பாய் சானு - பளு தூக்குதல்

இந்த வருடம் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் பளு தூக்குதலில் தங்கப்பதக்கம் வென்றார். 49 கிலோ பளு தூக்குதல் பிரிவில் 201 கிலோ எடை தூக்கியிருந்தார் மீரா பாய் சானு. 2020 டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இவர் வெள்ளி வென்றிருந்தார்.

பிவி சிந்து - பேட்மிண்டன்

இந்த வருடம் நடைபெற்ற காம்வெல்த் போட்டிகளில் தனது முதல் தங்கத்தை வென்றார் சிந்து. இதற்கு முன்னர் ஆசிய விளையாட்டு பேட்மிண்டன், ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்

வினேஷ் போகாட் - மல்யுத்தம்

இந்த வருடம் நடைபெற்ற காம்வெல்த் போட்டிகளில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தங்கப்பதக்கம் வென்றார். 2014 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் தங்கம் வென்றதை தொடர்ந்து, மூன்றாவது வருடமாக 2022ல் தங்கம் வென்று ஹாட் ட்ரிக் சாதனை படைத்தார் வினேஷ் போகாட்

சாக்‌ஷி மாலிக் - மல்யுத்தம்

இந்த ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்ஸில் சாக்‌ஷி மாலிக் வெண்கல பதக்கம் வென்றார். பிர்மிங்கம் காம்வெல்த் போட்டிகளில் 62 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார் சாக்‌ஷி

நிகட் சரீன் - குத்துச்சண்டை

இந்தியாவின் இளம் குத்துச்சண்டை வீராங்கனைகளில் ஒருவர் நிகட் சரீன். இவர் 2022ஆம் ஆண்டில் இந்தியாவிற்காக 2 தங்க பதக்கங்களை பெற்றுத் தந்தார். குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் மற்றும் பிர்மிங்கம் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார் நிகட்

ஹர்மன்பிரீத் கௌர்:

ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இந்த வருட காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளி வென்றது. வரலாற்றில் இதுவே இந்திய கிரிக்கெட் அணியின் முதல் காமன்வெல்த் பதக்கம்.

சவிதா புனியா - ஹாக்கி

சவிதா புனியா இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ஆவார். இவரது தலைமையிலான இந்திய ஹாக்கி பெண்கள் அணி காமன்வெல்த் போட்டிகளில் இந்த வருடம் வெண்கல பதக்கம் வென்றது

பவினா படேல் - பாரா டேபிள் டென்னிஸ்

பிர்மிங்கம் காமன்வெல்த்தில் பாரா டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் பவினா படேல் மகளிர் சிங்கிள்ஸ் பிரிவில் தங்கம் வென்றார்

சுஷீலா தேவி - ஜூடோ

காமன்வெல்த் போட்டிகளில் ஜூடோ வீராங்கனை சுஷீலா தேவி வெள்ளி பதக்கம் வென்றார். இது அவரது இரண்டாவது வெள்ளி பதக்கம் ஆகும்

அன்னு ராணி - ஈட்டி எறிதல்

காமன்வெல்த் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி அன்னு ராணி. இவர் வெண்கல பதக்கம் வென்றார்