Range Rover கார் டு கடற்கரை பங்களா: Virat - Anushka தம்பதியின் 11 விலை உயர்ந்த சொத்துகள்!

நட்சத்திர தம்பதி விராட் கோலி அனுஷ்கா சர்மாவின் சொகுசு கார்கள், பங்களாக்கள் என்னென்ன? அதன் மதிப்பு என்ன என்பதை பார்க்கலாம்
Virat Kohli - Anushka Sharma
Virat Kohli - Anushka Sharmaட்விட்டர்

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அவரது மனைவி அனுஷ்கா சர்மா மக்கள் மத்தியில் மிகவும் விரும்பப்படும் ஒரு நட்சத்திர தம்பதி.

இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்கள் கொண்ட கிரிக்கெட் வீரர் விராட். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் அனுஷ்கா.

பல முன்னணி பிராண்ட்களுக்கு அம்பாசிடர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள். இந்த நட்சத்திர தம்பதியின் சொகுசு கார்கள், பங்களாக்கள் என்னென்ன? அதன் மதிப்பு என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்

தெற்கு டெல்லியில் கோலிக்கு சொந்தமாக ஒரு பாஷான உணவகம் உள்ளது. Nueva என்ற இந்த உணவகத்தில் சவுத் அமெரிக்கன் உணவுகள் கிடைக்கும்

விராட் கோலி அனுஷ்கா சர்மா தம்பதி வைத்திருக்கும் சொகுசு கார்களில் ஒன்று Bentley Flying Spur. இதன் விலை ரூ.3.74 முதல் 3.97 லட்சம் வரை இருக்ககூடும்.

விராட் கோலிக்கு சொந்தமாக Wrogn ஃபேஷன் பிராண்ட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் இந்தியன் ப்ரீமியர் லீக்கின் ஸ்பான்ஸர்களில் ஒன்று. இதன் மதிப்பு ரூ.13.2 கோடி.

Virat Kohli - Anushka Sharma
ரிஷி சுனக் மனைவியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அவரின் இந்த ஆண்டு வருமானம் இவ்வளவா?

மும்பையின் லோகாண்ட்வாலா பகுதியில் அனுஷ்காவுக்கு சொந்தமாக ஒரு ஆபீஸ் ஸ்பேஸ் இருக்கிறது. இதன் மதிப்பு ரூபாய். 4.5 கோடி

நடிகை அனுஷ்கா சர்மா தனது சொந்த ஃபேஷன் பிராண்டான Nush என்ற நிறுவனத்தை கடந்த 2017ல் தொடங்கினார். இதன் மதிப்பு ரூ. 65 கோடி.

அனுஷ்கா சர்மாவின் Land Rover Range Rover - ன் விலை, இந்திய மதிப்பில் சுமார் 4 கோடி ரூபாய்.

அனுஷ்காவிடம் நிறைய வகையான ஹேண்ட் பேக்குகள் இருக்கின்றன. அவற்றில் இருப்பதிலேயே மிகவும் காஸ்ட்லியான பேக்கின் விலை ரூ.2.89 லட்சம். அது Chanel Deauville Grey Canvas Tote வகை பேக் ஆகும்.

Virat Kohli - Anushka Sharma
Khaby Lame: ஒரு போஸ்டுக்கு 6 கோடி வருமானமா? டிக் டாக் பிரபலத்தின் சொத்து மதிப்பு என்ன?

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு கைகடிகாரங்கள் மீது அலாதி பிரியம் இருக்கிறது. பல அரிதான, காஸ்ட்லியான வாட்சுகளுக்கு இவர் சொந்தக்காரர். இவரிடம் ரோலெக்ஸ் காஸ்மோகிராஃப் டேடோனா என்ற ஒரு வாட்சும் உள்ளது. இதன் விலை ரூ.8.6 லட்சம்!

விராட் கோலி சொகுசு கார்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான Audiயின் பிராண்ட் அம்பாசிடர். அந்நிறுவனம் கோலிக்கு பரிசாக Audi RS5 என்ற விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக அளித்தது. இதன் இந்திய மதிப்பு ரூ.1.11 கோடி.

டெல்லியில் இருக்கும் கோலியின் பங்களா 80 கோடி ரூபாய் மதிப்புள்ளது. இந்த வீட்டை கான்ஃப்ளூயென்ஸ் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.

Virat Kohli - Anushka Sharma
பில் கேட்ஸ், மார்க் ஜூகர்பெர்க் சொத்துகள் இரண்டு மடங்கு அதிகரிப்பு - விரிவான தகவல்கள்

மும்பையின் வார்லி பகுதியில் இருக்கும் இந்த தமப்திக்கு சொந்தமான வீடு ரூ.34 கோடி மதிப்புடையது.

இங்கு ஒரு பிரைவேட் டெரஸ், தோட்டம், ஜிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட படுக்கையறைகள் உள்ளன.

இந்த வீட்டின் மற்றொரு சிறப்பம்சம், Sea View. இங்கிருந்து அரபிக்கடலை நாம் பார்த்து ரசிக்கலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com