"எல்லாவற்றிற்கும் அறம் தான் அடிப்படை..." - காந்தியின் பொன்மொழிகள்!

Priyadharshini R

நீ எந்தவிதமான உலகத்தைப் பார்க்க விரும்புகிறாயோ, அதுபோலவே நீ மாறு.

ஒருவன், தாம் மேற்கொள்ளும் செயலின் முடிவை அறிந்து கொள்வதில் கவலையாக இருந்தால், அவனுக்குத் தடைகளும் எதிர்ப்புகளும் தான் அதிகம் தென்படும்.

ஒருவனிடம் துக்கமும், தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான்

மனதில் தீயவற்றைச் சிந்திப்பவன், தீயச் செயல்களைச் செய்பவன் போன்றவனே...

சிந்திப்பவனை விட செய்பவன் மோசமானவன் அல்ல

மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகிவிட முடியாது.

தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதை விட, பெரிய அவமானம் எதுவுமில்லை

எல்லாவற்றிற்கும் அறம் தான் அடிப்படை, அந்த அறத்துக்கே உண்மைதான் அடிப்படை.

ஒரு தியாகிபோலச் சாக, நமக்கு வீரம் வேண்டும்; அதற்காக, தியாகியாக வேண்டுமென்ற வெறி யாருக்கும் இருக்கக்கூடாது.

எல்லா நீதிமன்றங்களையும் விட உயர்ந்தது மனசாட்சி எனும் நீதிமன்றம்தான். அது, எல்லா நீதிமன்றங்களுக்கும் மேலானது.

இந்த உலகில் மனிதனின் தேவைக்குப் போதுமான அளவு வளமுள்ளது. அவனின் பேராசையளவுக்கு வளங்கள் இங்கில்லை.