ChatGTP அறிமுகபடுத்தப்பட்டது முதல் பெருமளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்த ஆர்டிஃபீசியல் இன்டலிஜன்ஸ் பெரும் சவாலாக இருக்கும் எனக் கூறிவருகின்றனர்.
சாதாரணமாக ஆர்டிஃபீசியல் இன்டலிஜன்ஸுடன் பேசக் கூடிய தொழில்நுட்பங்கள் பல இருந்தாலும் அவை வெவ்வேறு தளங்களில் இருந்தே தகவல்களைத் தரக் கூடியவை. ஆனால் சாட் ஜிடிபி எந்த ஒரு கேள்விக்கும் தானாக பதில் தரக்கூடியதாக இருக்கிறது.
தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்கள் சில அடிப்படை கோடிங் செய்யக் கூட சாட் ஜிடிபியை பயன்படுத்த முடிகிறது.
கவிதை, கதை, நகைச்சுவை எழுதவும் இதனால் முடிகிறது.
இந்த சாட்ஜிடிபி குறித்து ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான அதானி கூறியுள்ள விஷயம் இது பற்றிய ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அதானி அவரது லின்க்ட் இன் தளத்தில் தான் சாட்ஜிடிபி-க்கு அடிமையாகி (Addicted) இருப்பதாக எழுதியுள்ளார்.
உலக பொருளாதார மாநாடு குறித்த பதிவில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார், "சமீபத்தில் வெளியிடப்பட்ட சாட்ஜிடிபி ஏஐ தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய உருமாற்றம். இது பரந்து விரிந்த சாத்தியங்களையும் சில நகைச்சுவையான தோல்விகளையும் கொண்டுள்ளது."
அதானி, தொழில்நுட்ப உலகில் சிலிக்கான் சிப் போரைப் போல பெரிய அளவில் ஏஐ விவகாரம் உருவெடுக்கிறது என்றும் அதானி கூறியிருக்கிறார்.
அதானி சாட்ஜிடிபி-ஐ பாராட்டிப் பேசியது அவரது பின்தொடர்பவர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.
அதானி க்ரூப் ஏஐ குறித்த அறிவிப்புகள் மூலம் தொழில்நுட்பத் துறையில் கால்பதிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust