Byju's : "என் மனதை நொருக்கிவிட்டது" - பணி நீக்கம் குறித்த மனம் திறந்த பைஜூ ரவீந்தரன்
Byju's : "என் மனதை நொருக்கிவிட்டது" - பணி நீக்கம் குறித்த மனம் திறந்த பைஜூ ரவீந்தரன்Twitter

Byju's : "என் மனதை நொறுக்கிவிட்டது" - பணி நீக்கம் குறித்து மனம் திறந்த பைஜூ ரவீந்தரன்

பைஜூ பெரிய அளவிலான வெற்றியை அடைந்த ஸ்ட்ராட் அப் நிறுவனம். குறிப்பாக கொரோனா காலத்தில் ஆன்லைன் கல்வியை ஆக்கிரமித்த ஒன்றாக மாறியிருந்தது பைஜூஸ்.
Published on

கல்வித் தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸில் வேலை செய்த 2500 ஊழியர்கள் சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். நிறுவனத்தின் செலவீனங்களைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பைஜு நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளார்களில் இது 5% ஆகும். 2011ம் ஆண்டு பைஜு ரவீந்தரன் மற்றும் திவ்யா கோகுல்நாத் என்ற இளம் தொழில்முனைவோர்களால் உருவாக்கப்பட்டது தான் பைஜூஸ் நிறுவனம்.

மிகப் பெரிய வெற்றி ஸ்ட்ராட் அப்பாக வலம் வந்த பைஜுஸ், இது போன்ற நெருக்கடியை சந்திப்பது இதுவே முதல் முறை. ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பியது குறித்து மனமுடைந்த நிறுவனர் ரவீந்திரன் "அவர்களை மீண்டும் அழைத்துக்கொள்வது தான் எனது முதன்மையான பணி" என்று தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பைஜூ பெரிய அளவிலான வெற்றியை அடைந்த நிறுவனம். குறிப்பாக கொரோனா காலத்தில் ஆன்லைன் கல்வியை ஆக்கிரமித்த ஒன்றாக மாறியிருந்தது பைஜூஸ்.

இருந்த இடத்திலிருந்தே கல்வி கற்பிக்க முடியும் என்பதால் இதுபோன்ற நிறுவனங்களில் பணி செய்ய ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அறியவிலாளர்கள் ஆர்வமுடன் சேர ஆரம்பித்தனர்.

முன்னதாக வீட்டிலிருந்து வேலைப் பார்க்கும் முறையை விடுத்து அனைவரையும் அலுவலகத்துக்கு வர அறிவுறுத்தியது பைஜூஸ். அதன் படி சொந்த ஊரிலிருந்து பெங்களூரு போன்ற நகரங்களுக்கு புலம் பெயர்ந்தவர்களின் வாழ்வாதாரம் இந்த வேலை இழப்பினால் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது.

 Byju's : "என் மனதை நொருக்கிவிட்டது" - பணி நீக்கம் குறித்த மனம் திறந்த பைஜூ ரவீந்தரன்
வேலையை விட்டு நீக்கும் போது அழுத CEO, ஊழியருக்கு குவிந்த வேலை வாய்ப்பு - என்ன நடந்தது?

வேலை நீக்கம் குறித்து பைஜுஸ் நிறுவனர், "நிறுவனத்தை விட்டு வெளியேறிவர்களுக்காக நான் வருந்துகிறேன். இது என் மனதை நொறுக்கிவிட்டது" என்று கூறியுள்ளார்.

மேலும், "நீக்கப்பட்ட ஊழியர்கள் வெறும் எண்ணிக்கை இல்லை. நீங்கள் வெறும் எண்கள் இல்லை. என் நிறுவனத்தின் 5%. என்னில் 5%" எனவும் கூறியுள்ளார்.

மேலும் புதிதாக உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 Byju's : "என் மனதை நொருக்கிவிட்டது" - பணி நீக்கம் குறித்த மனம் திறந்த பைஜூ ரவீந்தரன்
Linkedin : 6,00,000 ஆப்பிள், அமேசான் ஊழியர்களின் ஐடிக்கள் நீக்கம் - பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com